Hardik Pandya Natasa Stankovic Latest News: நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவைந்து பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் அன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்று ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதும் குவாலிஃபயர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்தாண்டு சென்னை, குஜராத், லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்று தகுதிபெற்ற நிலையில், இந்த முறை இந்த நான்கு அணிகளும் பிளே ஆப் பக்கமே வரவில்லை எனலாம். அதிலும் சென்னை அணி கடைசி வரை போராடி 5வது இடத்தில் முடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. சென்னை அணி மட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியுமே 10ஆவது இடத்தில் முடித்து பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. 


சர்ச்சை வலையில் ஹர்திக் பாண்டியா


மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என பலராலும் இந்த தொடருக்கு முன் ஆரூடம் கூறப்பட்டது. அதில் எந்த தவறுமில்லை. பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி ஆல்-ரவுண்டர்களிலும் மும்பை அணிக்கு எவ்வித குறையும் இல்லை எனலாம். இருப்பினும் அந்த அணிக்கு சிறு சிறு குறைகள் இருந்தது. ஆனால், அந்த அணிக்கு எதிர்பாராத விதமாக இந்த முறை பேட்டிங், பந்துவீச்சு பயங்கரமாக சொதப்பியது. இதனால் அந்த அணி 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.


மேலும் படிக்க |சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல..! 5 பாயிண்ட்ஸ்


முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே சர்ச்சையில் தான் சிக்கியிருந்தது. இந்த முறை ஹர்திக் பாண்டியாவை டிரேட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டனாகவும் நியமித்தது. இதனால் ரோஹித் சர்மா வெறும் ஓப்பனராக மட்டும் செயல்பட்டார், சில போட்டிகளில் இம்பாக்ட் வீரராகவும் இருந்தார். ரோஹித்தை கேப்டன்ஸியில் இருந்து தூக்கியெறிந்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், தொடர் தொடங்கியதும் மைதானங்களிலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கூச்சல்கள் எழும் அளவிற்கு பிரச்னை தீவிரமானது.


பரபரப்பு தகவல்


இதனால், ஹர்திக் பாண்டியா மீதும் அவரின் கேப்டன்ஸி மீதும் பல புகார்கள் கிளம்பின. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சர்ச்சை வலையிலேயே சிக்கியிருந்தார் எனலாம். இந்நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியா தொடர்பாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக்கும் சில பிரச்னைகள் காரணமாக பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


செர்பிய நடிகையான நடாசா ஸ்டான்கோவிக்கை ஹர்திக் பாண்டியா நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. கரோனா காலகட்டத்தில் அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் அவரது திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே நடாசா கருவுற்றிருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகஸ்தயா பாண்டியா என பெயரிடப்பட்டது.


மேலும் படிக்க |IPL 2024 : விராட் கோலியை தூக்கினால் ஆர்சிபி கப் அடிக்கும் - கெவின் பீட்டர்சன்


முழு பின்னணி


இருவரும் கடந்த நான்காண்டுகளாக மண உறவில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் பிரச்னைகள் இருந்து வருவதாகவும், தற்போது அவர்கள் பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 


இந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக விளையாடிய எந்த ஒரு போட்டியும் நடாசா காண வரவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அவர் மைதானங்களுக்கு வருகை தந்திருந்தாலும் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டபோது, ஹர்திக் பாண்டியாவின் மனைவி மைதானத்திற்கு வராதது சந்தேகத்தை கிளப்பியதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 


அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா, நடாசா ஸ்டான்கோவிக் ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் மற்றொருவரை குறித்து எவ்வித பதிவும் சமீப காலங்களில் போடவில்லை எனலாம். அதாவது ஹர்திக் நடாசா குறித்தோ, நடாசா ஹர்திக் குறித்தோ சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தை கூட பதிவிடவில்லை. குறிப்பாக, மார்ச் 4ஆம் தேதி பாண்டியாவின் பிறந்தநாளாகும். அன்று கூட நடாசா ஸ்டான்கோவிக் அவருக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை எனலாம். அதுமட்டுமின்றி, நடாசா ஸ்டான்கோவிக் முன்னதாக இன்ஸ்டாகிராமில் தனது பெயரை Natasa Stankovic Pandya என வைத்திருந்த நிலையில், Natasa Stankovic என தற்போது மாற்றியுள்ளார். இது அவர்கள் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை கிளப்புவதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான குர்னால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பன்குரி ஆகிய மட்டும் நடாசாவின் பதிவிற்கு அடிக்கடி லைக் செய்வது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |டி20 உலக கோப்பை : யுவராஜ் சிங் பிளேயிங் லெவனில் ஜடேஜா, சாம்சனுக்கு இடமில்லை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ