சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல..! 5 பாயிண்ட்ஸ்

Rajasthan Royals vs Sunrisers Hyderabad, IPL 2024 Qualifier 2 preview ; எலிமினேட்டரில் ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் இரண்டுக்கு வந்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2024, 12:05 PM IST
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் இன்று மோதல்
  • குவாலிஃபையர் இரண்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு?
  • இம்முறை சன்ரைசர்ஸ் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று
சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல..! 5 பாயிண்ட்ஸ் title=

இந்தியன் பிரீமியர் லீக் 2024ல் குவாலிஃபையர் இரண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும். எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இருப்பினும், சன்ரைசர்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையரில் ராஜஸ்தான் அணி அவ்வளவு எளிதாக எல்லாம் வெற்றி பெற முடியாது. ஏன் என்பதற்கான 5 காரணங்களை பார்க்கலாம்.

பவுலர்கள் கிலி ஏற்படுத்தும் அபிஷேக் சர்மா 

ஐபிஎல் 2024 தொடரில் சன்ரசைர்ஸ் அணியின் ஓப்பனிங் தீப்பொறியாக இருக்கிறது. இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு பந்துவீசும் பவுலர்களின் நிலை, கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி எதிரடி பவுலர்களை கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அபிஷேக் சர்மா மட்டும் இன்று நிலைத்து நின்றுவிட்டால் ராஜஸ்தான் அணியின் பவுலர்கள் நிலை, கஷ்டம் தான். 

மேலும் படிக்க | ஆப்பு வைக்க காத்திருக்கும் ராஜஸ்தான்... வலையில் சிக்கும் ஹைதராபாத் - இரு அணிகளின் வெற்றி வியூகம் என்ன?

ட்ராவிஸ் ஹெட் மற்றொரு புயல்

ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மற்றொரு தூணாக ஓப்பனிங் பேட்டிங்கில் ஜொலிக்கிறார் டிராவிஸ் ஹெட். கடந்த சில போட்டிகளாக தடுமாறிக் கொண்டிருக்கும் அவர், இப்போட்டியில் மீண்டும் பார்முக்கு திரும்பினால் சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இறுதிப் போட்டி கனவும் கனவாகவே வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இவர் ஆடிய அதிரடி ஆட்டத்தில் எல்லாம் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய வெற்றிகளை இந்த ஐபிஎல் போட்டிகளில் பெற்றிருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு

பேட்டிங்கில் ஓப்பனிங் மட்டுமல்ல, மிடில் ஆர்டரிலும் நிதீஷ் குமார், ஹென்றிச் கிளாசன் ஆகியோர் தூண்களாக இருக்கும் நிலையில், பந்துவீச்சிலும் ஜொலிக்கிறது சன்ரைசர்ஸ் அணி. கேப்டன் பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி எதிரணியினருக்கு சிம்மசொப்மனாக இருக்கின்றனர். அத்துடன் பந்துவீச்சாளர்களை சூழலுக்கு ஏற்ப மாற்றுவதிலும், பீல்டிங் செட்டிங் செய்வதிலும் ஒரு கேப்டனாக தனித்து கம்மின்ஸ் இருப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. அது அந்த அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய உத்வேகமாகவும் இருக்கிறது.

ராஜஸ்தானின் டாப் ஆர்டர் சோகம்

ஐபிஎல் 2024 இன் முதல் பாதியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தானுக்கு அற்புதமாக செயல்பட்டனர். குறிப்பாக கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் உள்ளிட்டபேட்ஸ்மேன்கள் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடினர். ஆனால் பிளேஆஃப் நெருங்கும் போது, இந்த வீரர்கள் அந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இப்போது அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பட்லர் தனது நாட்டுக்குத் திரும்பிவிட்டார். அதேசமயம் சஞ்சு ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பினால் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. 

ராஜஸ்தான் பவுலிங்

பேட்டிங்கில் சன்ரைசர்ஸ் அணியை ஒப்பிடும்போது, ராஜஸ்தான் அணி கொஞ்சம் வீக்காகவே தெரிகிறது. இன்றைய போட்டியில் அதனை சரிசெய்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலாக இருக்கலாம். பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு நிகராகவே இருக்கிறது. போல்ட், அஸ்வின், சாஹல் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதனால், இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாய்ப்பு. இல்லையென்றால் சன்ரைசர்ஸ் அணி ஈஸியாக குவாலிஃபையர் இரண்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும்.

மேலும் படிக்க |ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News