ரோகித் சர்மாவுக்கு ஆபத்து


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் பல ஆண்டுகள் விளையாடிய ஹர்திக் பாண்டியாவை கடந்த ஐபிஎல் தொடரின்போதே மும்பை அணி தக்கவைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு அப்போது வியப்பாக இருந்தது. மும்பையின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்த ஹர்திக்கை மும்பை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுந்தபோது, ஹர்திக் மும்பை அணியின் கேப்டனாக விரும்பியதாகவும், அதற்கு அந்த அணி சம்மதம் தெரிவிக்காததால் வெளியேற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பின் குஜராத் அணிக்கு கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக், இப்போது இந்திய 20 ஓவர் அணிக்கு கேப்டனாகியுள்ளார்.


மேலும் படிக்க | நான் என்னடா பண்ணேன்? அருகில் இருந்தவரது மண்டையை உடைத்த ரெய்னா, கோலி!


அடுத்த கேப்டன்


நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தான் களமிறங்க இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக பேசிய ஹர்திக் பாண்டியா, அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கான பயணத்தை இந்திய அணி இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். அதன்மூலம் அடுத்த 20 ஓவர் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்பதை மறைமுகமாக அவர் கூறியிருப்பதாக யூகங்கள் கிளம்பியிருக்கின்றன. பிசிசிஐயும் அந்த முடிவில் தான் இருக்கிறது. 


எப்போது மாற்றம்?


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் மிக மோசமாக தோல்வியை அடைந்ததால் சீனியர் வீரர்களை 20 ஓவர் அணியில் இருந்து ஓரம் கட்ட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. விராட் கோலியை தவிர மற்ற சீனியர் பிளேயர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முனைப்பில் பிசிசிஐ இருப்பதால், எந்நேரமும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. மேலும், ரோகித் சர்மா 20 ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற தகவலும் உலா வந்து கொண்டிருக்கிறது. 


ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் விளையாடி, அவரிடமே மொத்த வித்தையையும் கற்றுக் கொண்ட ஹர்திக் பாண்டியா இப்போது ரோகித்தின் கேப்டன்சிக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்ற பார்வையும் ரசிகர்களிடத்தில் இருக்கிறது. 


மேலும் படிக்க | தோனி போட்ட மாஸ்டர் பிளானால் சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ