நான் என்னடா பண்ணேன்? அருகில் இருந்தவரது மண்டையை உடைத்த ரெய்னா, கோலி!

28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது.  

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2022, 11:57 AM IST
  • 2011 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.
  • 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது.
  • தோனி தலைமையில் இந்திய அணி சாதனை.
நான் என்னடா பண்ணேன்? அருகில் இருந்தவரது மண்டையை உடைத்த ரெய்னா, கோலி! title=

2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை கைப்பற்றியது. 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் இருந்தது. தோனி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றினார், அதன் பிறகு நடைபெற்ற 50 உலகக் கோப்பையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

மேலும் படிக்க | தோனி போட்ட மாஸ்டர் பிளானால் சிஎஸ்கேவில் மீண்டும் ஜடேஜா!

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினதிலிருந்து தற்போது வரை ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும் அரை இறுதியில் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு மைதானத்தில் கோலி மற்றும் ரெய்னா செய்த சேட்டை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

உலக கோப்பையை விராட் கோலி மற்றும் ரெய்னா கையில் வைத்துள்ளனர், பாதுகாவலர்கள் சுற்றி இருக்க வீரர்கள் மைதானத்தை வளம் வந்தனர். அப்போது இவர்களுக்கு அருகில் இருந்த நபர் தலையில் கோப்பை தெரியாமல் படுகிறது. உடனடியாக ரெய்னா மீண்டும் வேண்டுமென்று அவர் தலையில் கோப்பை வைத்து அடிக்கிறார். அருகில் இருந்து விராட் கோலி ரெய்னாவை பார்த்து சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023: இந்த 3 வீரர்களை அணியில் எடுக்க சிஎஸ்கே திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News