ஐபிஎல் 2023 தொடருக்கான பிளேயர் ரீட்டெயின் லிஸ்டை அனைத்து அணிகளும் ஒப்படைத்துள்ளன. இதில், சிஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் தக்கவைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாக அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லாமல், மனக்கசப்பில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியிலேயே இந்த மனக்கசப்பு தொடங்கிவிட்டது.
மேலும் படிக்க: தோனி செய்த கடைசி நிமிட மாற்றம்! இந்த வீரர்கள் CSK-யில் இனி இல்லை!
அந்த தொடருக்கு முன்பாக கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய நிலையில், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. பிளேயராக மட்டுமே இருந்த தோனி, களத்தில் முடிவுகளை எடுக்க தொடங்கினார். கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா பந்துவீச்சிலும் சோடைபோக, மிகுந்த மன அழுத்தத்துக்குள்ளாகி ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் வெளியே உட்கார வைக்கப்பட்டார். அப்போது மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார் தோனி.
இந்த விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழத் தொடங்கியது. ஐபிஎல் 2022 தொடர் முடிவடைந்ததும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான அத்தனை புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். அப்போது முதல் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகலாம் என்ற தகவல் வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இதை மறுத்தாலும், ஜடேஜா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில், ஐபிஎல் பிளேயர் ரீட்டென்ஷனுக்கு முன்பாக ஜடேஜாவிடம் பேசிய தோனி, அவரை கூல் செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், தோனிக்கு தலைவணங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜடேஜா.
மேலும் படிக்க: ஐபிஎல் 2023 சிஎஸ்கே பட்டியல்: ரவீந்திர ஜடேஜா தக்கவைப்பு டுவைன் பிராவோ விடுவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ