மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, மிகக் குறுகிய காலத்தில் தனது கேரியரில் சாதனை படைத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர் ஹார்திக் பாண்டியா. ஹார்திக் பாண்டியா மிகக் குறுகிய காலத்தில் உலக கிரிக்கெட்டில் ஏராளமான செல்வத்தையும் புகழையும் அடைந்துள்ளார். ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக பெரும் செய்தி வெளியாகியுள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 கோடி மதிப்புள்ள ஹார்திக் பாண்டியாவின் கைக்கடிகாரத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது


ஹார்திக் பாண்டியாவின் கைக்கடிகாரத்தின் விலையை கேட்டால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்!! ஹார்திக் பாண்டியாவின் (Hardik Pandya) இந்த 2 கைக்கடிகாரங்களின் விலை ரூ.5 கோடி ஆகும். ஹார்திக்கின் இந்த 2 கைக்கடிகாரங்களும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, தேர்வாளர்கள் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கினர். 


டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பை திரும்பிய ஹார்திக் பாண்டியாவின் இரண்டு கைக்கடிகாரங்கள் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.


ALSO READ: IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா


ஹார்திக் பாண்டியாவின் கைக்கடிகாரம் ஏன் பறிமுதல் செய்யப்பட்டது?


இந்த கடிகாரங்களுக்கான பில் ஹார்திக்கிடம் இல்லை. மேலும் அவர் தன்னிடம் கடிகாரங்கள் இருப்பதாக அவர் அறிவிக்கவும் இல்லை. இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத் துறையினர் (Customs) பறிமுதல் செய்தனர்.


ஹார்திக் விலை உயர்ந்த கடிகாரங்களை மிகவும் விரும்புபவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில மாதங்களுக்கு முன், 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள Patek Philippe Nautilus Platinum 5711 கடிகாரத்தை அவர் வாங்கியுள்ளார்.


டி20 உலகக் கோப்பையில் பாண்டியா படுதோல்வி அடைந்தார்


டி20 உலகக் கோப்பையில் (T20 World Cup) ஹார்திக் பாண்டியா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மோசமான முறையில் தோல்வியடைந்தார். ஐந்து போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் அவரால் 69 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். ஹார்திக் பாண்டியாவுக்குப் பதிலாக வெங்கடேஷ் ஐயர் ஆல்ரவுண்டராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


ALSO READ:இந்த பெரிய பொறுப்பை விவிஎஸ் லட்சுமணிடம் ஒப்படைத்த பிசிசிஐ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR