இந்த பெரிய பொறுப்பை விவிஎஸ் லட்சுமணிடம் ஒப்படைத்த பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பழம்பெரும் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2021, 04:42 PM IST
இந்த பெரிய பொறுப்பை விவிஎஸ் லட்சுமணிடம் ஒப்படைத்த பிசிசிஐ title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பழம்பெரும் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி 2023 ஒருநாள் உலகக் கோப்பை வரை டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார். ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி காலியானது. இதற்காக பிசிசிஐ தற்போது டிராவிட்டின் சக பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணனை தேர்வு செய்துள்ளது.

லட்சுமணனுக்கு பெரிய பொறுப்பு கிடைத்தது
தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) அடுத்த தலைவராக இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் VVS லக்ஷ்மண் (VVS Laxman) நியமிக்கப்படுவார். இந்தத் தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ALSO READ | நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!

இதற்கிடையில் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவரது முன்னாள் சக வீரர் ராகுல் டிராவிட்க்குப் பதிலாக லக்ஷ்மண் நியமிக்கப்படுவார். இது தொடர்பாக மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் PTI இடம் கூறியதாவது, “VVS லக்ஷ்மன் NCA இன் புதிய தலைவராக இருப்பார். லக்ஷ்மண் ஏற்கனவே இந்தியன் பிரீமியர் லீக் உரிமையாளரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வழிகாட்டி பொறுப்பில் இருந்து விலகிவிட்டார் என்றார்.

டிசம்பர் 4ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பிசிசிஐயின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு (ஏஜிஎம்) முன்னதாக லட்சுமணனின் நியமனம் அமலுக்கு வரும் என நம்பப்படுகிறது. இதற்காக லக்ஷ்மண் பெங்களூரில் குறைந்தது 200 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அதன்படி தற்போது இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களான லக்ஷ்மண் மற்றும் டிராவிட் இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  மீண்டும் ஃபார்முக்கு வந்த ஹர்திக் பாண்டியா, கதிகலங்கும் நியூசிலாந்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News