நூர் சுல்தான்: 2019 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் (World Boxing Championships 2019) ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற அமித் பங்கல் (Amit Panghal) இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். உலக குத்துச்சண்டை போட்டியில் இறுதி போட்டியில் செல்லும் முதல் இந்திய ஆண் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இறுதிபோட்டிக்கு சென்றுள்ளதால் தங்கம் அல்லது வெள்ளி கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்பதை உறுதியளித்துள்ளார். இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் 63 கிலோ பிரிவில் மணீஷ் கவுசிக் (Manish Kaushik) அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் (AIBA World Boxing Championships) இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய ஆண் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை இந்தியாவின் அமித் பங்கல் பெற்றுள்ளார். ரஷ்யாவின் எகடெரின்பர்க்கில் (Ekaterinburg) இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 52 கிலோ எடை பிரிவின் அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவை (Saken Bibossinov) அமித் 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 


ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற அமித் பங்கல், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் விஜேந்தர் சிங், விகாஸ் கிரிஷன், சிவா தாபா மற்றும் கவுரவ் பிதுரி ஆகியோரை அரையிறுதியில் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், அனைத்து தடைகளையும் மீறி பைனலுக்கு சென்ற முதல் இந்திய ஆண் குத்துச்சண்டை வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.