ரிவ்யூ எடுக்கச் சொல்லி அடம்பிடித்த குல்தீப்... கண்டுக்காத ரோஹித் சர்மா - கடைசியில் நடந்தது இதுதான்!
Rohit Sharma Kuldeep Yadav: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது குல்தீப் யாதவ் ரிவ்யூக்கு செல்லும்படி கூறியபோது, ரோஹித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
Rohit Sharma Kuldeep Yadav: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையயோன இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. பிப். 2ஆம் தேதி அன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கி, 14 ஓவர்கள் வரை விளையாடியிருக்கிறது.
மொத்தம் 67 ரன்களை எடுத்து, 1 விக்கெட்டை மட்டும் இங்கிலாந்து அணி இழந்துள்ளது. அஸ்வினின் சுழலில் சிக்கி டக்கெட் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎஸ் பரத் ஒரு அற்புதமான கேட்சை பிடித்து ஸாக் கிராலி மற்றும் டக்கெட்டின் அதிரடி பார்ட்னர்ஷிப்பை இன்றைய செஷனிலேயே பிரித்ததுதான் சிறப்பு.
2ஆவது டெஸ்ட்... 3ஆவது நாள்
டக்கெட் அவுட்டான பின்னர், பந்துவீச்சாளரும் 9ஆவது விக்கெட்டுக்கு இறங்கக்கூடிய சுழற்பந்துவீச்சாளரான ரெஹான் அகமது களமிறங்கினார். அவரும் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரிகளை அடிக்க, கிராலி 29 ரன்களுடனும், அகமது 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா, முகேஷ், அஸ்வின், குல்தீப், அக்சர் என ஐந்து பந்துவீச்சாளர்கள் இன்றைய கடைசி 14 ஓவர்களில் பயன்படுத்தப்பட்டனர்
மேலும் படிக்க | கடைசி வாய்ப்பை கெட்டியாய் பிடித்த கில்... இனி இந்த வீரருக்குதான் பெரிய பிரச்னை!
இதில் முக்கியமான விஷயம் பும்ராவின் தொடர்ந்து 5 ஓவர்கள் ஸ்பெல் ஆகும். லைன் மற்றும் லெந்தை துல்லியமாக பார்த்து பும்ரா வீசியதால், இந்த 5 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டுமே பும்ரா கொடுத்துள்ளார். அதிலும ஒரு ஓவர் மெய்டன் ஆகும். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் முகேஷ் குமாரை தாக்கி ரன்களை சேகரித்த நிலையில், பும்ரா ஓவரில் மிகுந்த சிரத்தையுடனே விளையாடினர்.
ரிவ்யூ கேட்காத ரோஹித்
அந்த வகையில் பும்ரா அவரது இரண்டாவது ஓவரை வீசினார். அப்போது கிராலி எதிர்கொண்ட ஒரு பந்து அவரது பேட்டிற்கு மிக அருகில் சென்று, அவரை கடந்த கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. பும்ரா, கீப்பர் கேஎஸ் பரத் உள்பட ஸ்லிப்பில் நின்ற அனைவரும் அதனை அவுட் அப்பீல் செய்தனர். இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா அனைத்து தரப்பையும் விசாரித்து ரிவ்யூவை கேட்காமல் விட்டுவிட்டார்.
இந்த சம்பவத்தின் போது, ஸ்கோயர் லெக் திசையில் இருந்த குல்தீப் யாதவ், உடனே ரோஹித்திடம் வந்து அது பேட்டில் பட்டதாகவும், ரிவ்யூவை எடுக்கும்படியும் வற்புறுத்தினார். இருப்பினும், அதனை சற்றே கடுப்பான தொனியில் மறுத்துவிட்டு, ரிவ்யூ எடுக்காமல் சென்றார்.
குல்தீப்பை மாட்டிவிட்ட ரீ-பிளே
அதன்பின், சற்று நேரத்தில் பெரிய திரையில் போடப்பட்ட ரீ-பிளேவில் பந்து பேட்டில் படவேயில்லை என்பது தெளிவானது. உடனே, தொலைக்காட்சி கேமரா ரோஹித் சர்மாவை காண்பிக்க அவர் மிகுந்த முக மலர்ச்சியுடன், கட்டை விரலை காண்பித்து குல்தீப் யாதவை சிரித்தார். அதாவது, குல்தீப்பி்ன் பேச்சின் முழுமையாக கேட்காமல் வேண்டாம் என்று முடிவெடுத்தது சரியாகிவிட்டது என்ற அர்த்தத்தில் அந்த சிரிப்பு இருந்தது. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நாளை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு 332 ரன்கள் அடிக்க வேண்டும். இந்திய அணி 9 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ