IND vs AFG: `கிளீன் போல்ட்` டக் அவுட்டான ரோஹித் சர்மா... சாதனை போட்டியில் சொதப்பல்!
IND vs AFG 2nd T20 Match Update: இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
IND vs AFG 2nd T20 Match Update: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும், இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. சுப்மான் கில், திலக் வர்மா ஆகியோருக்கு பதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
நயிப் மிரட்டல் அரைசதம்
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் ஓப்பனிங்கில் இறங்கினர். மூன்றாவது ஓவரிலேயே குர்பாஸ் அகமது 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து குல்புதீன் நயிப் பவர்பிளே ஓவர்களில் அதிரடி காண்பித்தார். இருப்பினும், இப்ராஹிம் சத்ரான் 8 ரன்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 2 ரன்கள் என அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.
அரைசதம் அடித்து அதிரடி காட்டிய நயிப் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடக்கம். அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட்டானது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் தூபே 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 173 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் படிக்க | MS Dhoni: SA20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தோனி?
தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஓப்பனர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடி காண்பித்தார். ஸ்ட்ரைக்கிங் முனைக்கு வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே அதிரடியாக விளையாட முயன்று கிளீன் போல்டாகினார். கடந்த போட்டியும் டக் அவுட்டாகி சென்ற ரோஹித் சர்மா, இந்த போட்டியில் கோல்டன் டக்காகி வெளியேறினார் எனலாம்.
ரோஹித் சர்மாவுக்கு இது 150ஆவது சர்வதேச டி20 போட்டியாகும். சர்வதேச டி20 அரங்கில் இதுவரை எந்த வீரரும் எட்டாத மைல்கல்லை ரோஹித் சர்மா அடைந்துள்ளார். இருப்பினும், இந்த சாதனை போட்டியில் கோல்டன் டக் அவுட்டானது அவருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. தொடர்ந்து களம் கண்ட விராட் கோலியும் வழக்கத்திற்கு மாறாக அதிரடியாக விளையாடினார்.
அவரும் ஜெய்ஸ்வாலும் இணைந்து ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். விராட் கோலி நவீன் உல் ஹக் பந்துவீச்சில் நேராக, பௌலர் தலைக்கு மேல் அடித்த அந்த பவுண்டரி பலராலும் ரசிக்கப்பட்டது. விராட் கோலி பவுண்டரிகளையும், ஜெய்ஸ்வால் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்து மிரட்டியது. துரதிருஷ்டவசமாக விராட் கோலி 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து நவீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது தூபே - ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். 9 ஓவர்களில் இந்தியா 95 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் யார்...? இந்திய வீரர்கள்தான் டாப்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ