2ஆவது டெஸ்ட்: இந்திய வெற்றி 99% உறுதி... இங்கிலாந்தால் அடிக்கவே முடியாது - ஏன் தெரியுமா?
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
IND vs ENG 2nd Test Highlights In Tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்த போட்டியின் நான்காவது இன்னிங்ஸ் தற்போது தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்களை எடுத்தார். மேலும், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர், ரெஹன் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்-அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுப்மான் கில் சதம்
அதன்படி, 143 ரன்கள் முன்னிலையுடன் நேற்றை இரண்டாவது நாளில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 28 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி நல்ல நிலையில் இருந்த இந்திய அணிக்கு, இன்றைய தினத்தின் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ரோஹித், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆண்டர்சன் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மேலும் படிக்க | டபுள் செஞ்சுரிக்கு ஓடோடி வந்து பாராட்டிய சச்சின்..! யஷஸ்வி ரியாக்ஷன் இதுதான்
இருப்பினும், சுப்மான் கில் ஒரு முனையில் நிலையாக நின்று ரன்களை சேர்த்தார். ஷ்ரோயாஸ், அக்சர் படேல் ஆகியோர் அவருக்கு சற்று உதவினாலும் அவர்களாலும் நீண்ட நேரம் களத்தில் நீடித்திருக்க இயலவில்லை. சுப்மான் கில் சதம் அடித்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேஎஸ் பரத், குல்தீப் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அஸ்வின் மட்டும் கடைசியில் கொஞ்சம் போராடினார்.
தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களை இந்திய அணி குவித்தது. குறிப்பாக, 399 ரன்களை இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஹார்ட்லி 4, ரெஹேன் அகமது 3, ஆண்டர்சன் 2, பஷிர் 1 விக்கெட்டை கைப்பற்றினர். தற்போது இங்கிலாந்து ஓப்பனர்கள், கிராலி, டக்கெட் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், இந்த இலக்கை இங்கிலாந்து அணியால் சேஸிங் செய்ய இயலாது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, 4ஆவது நாள் (நாளை) ஆடுகளத்தில், சுழற்பந்துவீச்சு நன்றாக கைக்கொடுக்கும் என்பதால் இந்திய அணிக்கே அதிக சாதகம் என அவர்களின் தரப்பு வாதத்தை கேட்க முடிகிறது.
மறுபுறம், டெஸ்ட் போட்டியில் 399 ரன்கள் இலக்கை இந்திய மண்ணில் எந்த அணியும் வெற்றிகரமாக அடித்தது கிடையாது. 387 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக (2008) அடித்ததுதான் வெற்றிகரமான சேஸிங்காக பார்க்கப்பட்டது. அந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மேலும், இதுவரை டெஸ்டில் 418 ரன்களைதான் வெற்றிகரமாக மேற்கு வங்க தீவுகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துள்ளது.
எனவே, இந் சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் அக்சர் - குல்தீப் - அஸ்வின் கூட்டணியை முறியடித்து, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் இது சாதனை வெற்றிதான். எனவேதான் இந்தியாவுக்கு 99% வாய்ப்பும், இங்கிலாந்து அணி 1% வாய்ப்பும் மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் முழுமையாக 2 நாள்கள் உள்ளன என்பதும் நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | பும்ரா: புயலாக வீசிய பந்துகளில் மாலையாக வந்த சாதனைகள்.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ