ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வரும் 3–வது உலக ஆக்கி லீக் அரைஇறுதியில் அர்ஜென்டினாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புவனேஸ்வரத்தில் நடைப்பெற்று வரும் உலக ஆக்கி லீக் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தினில் உலக தரவரிசையில் 6–வது இடம் இருக்கும் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசியில் முதலிடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சையில் இறங்கியது. 


இரண்டு அணி வீரர்களும் வெற்றியை நோக்கி கடுமையக போராடினர். இதற்கிடையில் குறுக்கிட்ட மழை ஆட்டத்தினை கெடுத்தது. மழையின் காரணமாக மைதானத்தில் ஓரளவு தண்ணீர் தேங்க, வீரர்கள் வழக்கமான ஷாட்டுகளை அடிப்பதில் தடுமாறினர்.


இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 1–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


இதனையடுத்து இன்று நடைபெறும் 2–வது அரைஇறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஜெர்மனியும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்யில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும்.


தோல்வியடையும் அணி  3–வது இடத்துக்கான நாளைய ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும்.