சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜூன் மாதத்துக்கான பிளேயர் ஆஃப் மன்த் விருதுகளுக்கான பரிந்துரைகளை அறிவித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக "பிளேயர் ஆப் தி மன்த்" (ICC Player of the Month awards) என்ற விருதினை வழங்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஜூன் மாதத்திற்கான விருதுகள் பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதில் ஆண்கள் பிரிவில் டெவொன் கான்வே (Devon Conway), குவின்டன் டி கொக் (Quinton de Kock) மற்றும் கைல் ஜேமீசன்  (Kyle Jamieson) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல பெண்கள் பட்டியலில் சோஃபி எக்லெஸ்டோன் (Sophie Ecclestone), சினே ராணா (Sneh Rana) மற்றும் ஷஃபாலி வர்மா (Shafali Verma) ஆகியோர் உள்ளனர்.


ஐ.சி.சி வாக்களிப்பு அகாடமி மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு மாதத்திற்கான வெற்றியாளர்களை தீர்மானிக்க வாக்களிப்பார்கள். Icc-cricket.com/awards இல் பதிவுசெய்யப்பட்ட ரசிகர்கள் வாக்களிக்கலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வாக்களிக்கலாம். இது ஜூலை 12 திங்கள் அன்று யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று அறிவிக்கப்படும்.


ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி ஆண்கள் விருது பரிந்துரைக்கப்பட்டவர்கள்:


டெவன் கான்வே (நியூசிலாந்து)
நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே லார்ட்ஸில் அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77 ஆவது இடத்தில் நுழைந்தார். ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் தொடர்ந்து அடித்தார். அவர் 63.16 சராசரி அளவில் 379 ரன்கள் எடுத்தார்.


ALSO READ | IPL 15: ஐ.பி.எல். குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட பி‌சி‌சி‌ஐ


குயின்டன் டி கோக் (தென்னாப்பிரிக்கா)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான குயின்டன் டி கோக் தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளார். முதல் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 141 ரன்களையும், இரண்டாவது டெஸ்டில் 96 ரன்கள் என மொத்தமாக 118.50 என்ற சராசரி அடிப்படையில் 237 ரன்கள் எடுத்தார். அதேபோல மூன்று டி 20 போட்டிகளில், அவர் 142.10 ஸ்ட்ரைக் விகிதத்தில் 135 ரன்கள் எடுத்தார்.


கைல் ஜேமீசன் (நியூசிலாந்து)
சவுத்தாம்ப்டனில் இந்தியாவுக்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமீசன் 61 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை எடுத்தார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்தார். அதே நேரத்தில் ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா மற்றும் ரிஷாப் பந்த் போன்ற முக்கிய வீரர்களை அவுட் செய்தார். ஜூன் மாதத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 17.40 சராசரியாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி மகளிர் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
  
சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து)
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் டெஸ்டில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிகவும் வெற்றிகரமான பந்து வீச்சாளராக இருந்தார். டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு இன்னிங்சிலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இந்த மாதத்தில் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகளையும் பெற்றார். 


ALSO READ | Video: தகதகவென எரித்த தோனியின் புகைப்படம்; ரசிகர் அளித்த பரிவு


சினே ராணா (இந்தியா)
ஆல்ரவுண்டர் சினே ராணா பிரிஸ்டலில் ஒரு மறக்கமுடியாத டெஸ்ட் அறிமுகமானார், 154 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியைத் தடுக்க அவரது பங்களிப்பு உதவியது. அதே டெஸ்ட் போட்டியில், அவர் 131 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுக்களையும் எடுத்தார். அதில் இங்கிலாந்து பெண்கள் அணியின் முக்கிய ஆட்டக்காரர் டம்மி பியூமண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் ஆகியோரை அவுட் செய்தார் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 


ஷஃபாலி வர்மா (இந்தியா)
இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக அறிமுகமான தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா பிரிஸ்டல் டெஸ்டில் நன்றாக ஆடியதற்கு பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுக்கு என பரிந்துரை செய்யப்பட்டார். 17 வயதான அவர் முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் 96 மற்றும் 63 ரன்களைக் குவித்து இரண்டு அரைசதம் அடித்த முதல் இந்தியப் பெண் வீராங்கனையாகவும், உலக அரசில் நான்காவது வீரராகவும் இடம் பிடித்துள்ளர். அவரது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அறிமுகமான ஒரு இந்தியப் பெண் வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்தியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் 85.50 ஸ்டைக்ரேட் விகிதத்தில் 59 ரன்கள் எடுத்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR