இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் ஹத்துருசின்ஹா மற்றும் மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் தடை விதித்து ICC உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்திய விவாகரத்த்தில் தண்டனை பெற்றார். இதனையடுத்து, பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசின்ஹா, மேலாளர் அசங்கா குருசின்ஹாவுடன் இணைந்து, போட்டியில் பங்கேற்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சண்டிமல் மீது இரண்டாவது முறையாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 


இந்த நடவடிக்கைகளால் ICC விதிகளை மீறிய இந்த மூன்று பேருக்கும் 3-ஆம் நிலை குற்றவிதிகளின் படி குறைந்தப் பட்ச தண்டனையாக இரண்டு டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 டீமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.



கடந்த ஜூலை 11-ஆம் நாள் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு, இந்த முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது. 8 இடைக்கால தடை புள்ளிகள் பெற்றால், 2 டெஸ்ட் அல்லது 4 ஒருநாள்/டி20, அல்லது 8 ஒருநாள்/டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். 


அந்த வகையில் பயிற்சியாளர் சண்டிகா ஹத்துருசின்ஹா, மேலாளர் அசன்கா குருசின்ஹா, கேப்டன் தினேஷ் சண்டிமல் ஆகிய மூவருக்கும் 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் கேப்டன் சண்டிமல் இடம்பெற மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!