NZ vs PAK: நியூசிலாந்தின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி போடுமா பாகிஸ்தான்; வெற்றி இலக்கு 238
இன்றைய உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணித்த நியூசிலாந்து அணி.
19:54 26-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. ஜேம்ஸ் நீஷம் நிதான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியால் 237 ரன்கள் சேர்க்க முடிந்தது. ஜேம்ஸ் நீஷம் 97(112) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வெற்றி பெற 238 ரன்கள் தேவை.
18:18 26-06-2019
பாகிஸ்தான் பந்து வீச்சில் தடுமாறும் நியூசிலாந்து; 30 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழபுக்கு 94 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
15:50 26-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி பந்து வீச உள்ளது.
14:50 26-06-2019
பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ள, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் தான் தாமதம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பர்மிங்காம்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து இதுவரை இதுவரை ஆடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்க்கவில்லை. இந்தியாவுடனான போட்டி மட்டும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. மற்ற ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்று 11 புள்ளியுடன் அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது. இனி மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்புக்கு முன்னேறி விடும்.
அதேபோல பாகிஸ்தான் அணியை பொருத்த வரை, ஆடிய ஆறு ஆட்டங்களிலும் 2 வெற்றி, 3 தோல்வி மற்றும் மழையின் காரணமாக ஒரு போட்டி ரத்து என 5 புள்ளியுடன் அட்டவணையில் 7வது இடத்தில் உள்ளது. 2019 உலக கோப்பை அரையிறுதியில் தகுதி பெற வேண்டும் என்றால் மீதமுள்ள போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், அதேவேளையில் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மற்ற அணியிடம் தோற்க வேண்டும். பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மற்ற அணியின் கையில் உள்ளது என்றே கூற வேண்டும்.
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிக முக்கியம். அதேநேரத்தில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்று விடும். யார் வெற்றி பெறுவது...? காத்திருப்போம்...!!