ஐசிசி தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் தொடரும் கோலி!
ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கனக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய வீரரகள் சிலரும் தங்களது தரவரிசை நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பேட்ஸ்மன் பட்டியலை பொறுத்தவரை ரோகித் சர்மா தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் கேப்டன் விராத் கோலி தக்கவைத்துள்ளார். இதன் மூலம் டாப்-5 பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் இரண்டுவீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சாளர் பட்டியலைப் பொறுத்தவரையில் அக்ஸர் பட்டேல் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல் சாகல் 75-வது இடமும், குல்தீப் யாதவ் 80-வது இடமும் பிடித்துள்ளனர்.