ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில், இன்று ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது. அதில், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இன்று மோதின. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை குவித்தது. அதில், அதிகபட்சமாக பின்ச் 63 ரன்களையும், ஸ்டாய்னிஸ் 35 ரனக்ளையும் எடுத்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் பாரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


இதன்மூலம், 180 ரன்கள் என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்தான் முழு ஆதிக்கத்தையும் செலுத்தினர். அயர்லாந்து பேட்டர்களில் லோர்கன் டக்கர் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளிக்க, மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 



மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!


இதனால், அயர்லநாது அணி 18.1 ஓவர்களிஸ் 137 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டக்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 71 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


ஆட்ட நாயகனாக ஆரோன் பின்ச் தேர்வான நிலையில், ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், 4 போட்டிகளை  ஆஸ்திரேலியா விளையாடிவிட்டதால், ஆஃப்கானிஸ்தான் உடனான கடைசி போட்டி மிக முக்கியமானதாக மாறியுள்ளது. அன்த போட்டியிலும் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும். 


இதனால், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 1 தோல்வி, 1 வெற்றி, 1 டிரா என 3 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவை விட அதிக ரன்ரேட் வைத்திருந்தாலும், இங்கிலாந்தின் நிலை கவலைக்குரியதாகவே உள்ளது. 


ஏனென்றால், இங்கிலாந்து அணி நாளைய போட்டியில், அசுர பலத்தில் உள்ள நியூசிலாந்தை சந்திக்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து கட்டாயம் வென்றே ஆக வேண்டிய தேவை உள்ளது. ஒருவேளை நாளைய போட்டியில் தோற்றால், அதன் அரையிறுதி கனவு ஏறத்தாழ முடிந்துவிடும்.



புள்ளிப்பட்டியலில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன் முறையே முதலிரண்டு இடத்திலும், இங்கிலாந்து, அயர்லாந்து 3 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் 2 புள்ளிகளுடன் முறையே ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளன.  


மேலும் படிக்க | Video : செம! மேகத்திற்கு மேலே... கிரிக்கெட் பார்க்க சூப்பரான லோகேஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ