ICC T20 World Cup final, Pakistan vs England : 8ஆவது டி20 உலகக்கோப்பை தொடர், இன்றுடன் நிறைவைடய உள்ளது. அனைவரும் எதிர்பார்த்துவந்த, இன்றைய இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறும் நிலையில் இருந்தது. ஆனால், நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சிவைத்தியம் கொடுத்த பலனால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தது. 


இருப்பினும், காயத்தில் இருந்து மீண்டு வந்தஷாகின் அஃப்ரிடி, அதிரடியை தொடங்கியிருக்கும் ரிஸ்வான் - பாபர் ஜோடி என பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு அசூர பலத்துடன் தகுதிபெற்றுள்ளது. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்திய அதே பலத்துடன் இங்கிலாந்தை இன்று பதம் பார்க்க காத்திருக்கிறது.


மேலும் படிக்க  | பாகிஸ்தான் அணி பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறது: உலக கோப்பை ஆசைக்கு வேட்டு வைத்த கும்பிளே



பந்துவீச்சில் உலகத்தர வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு, பேட்டிங்கில் தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


அதேபோன்று, இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு போராடிதான் வந்தது. ஆனால், அரையிறுதியில் இந்திய அணியை அசால்ட்டாக ஊதித்தள்ளி, கம்பீரத்துடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அதிரடி இன்றும் தொடருமானால், பாகிஸ்தானுக்கு சற்று பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. 


மலான், மார்க் வுட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டாலும், இங்கிலாந்து அணி அதிலிருந்து மீண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். அணியில் 8ஆவதாக களமிறங்கும் வீரர் வரை பேட்டர்களை வைத்துள்ள இங்கிலாந்து அணி, சுமார் 7 பந்துவீச்சாளர்களை ஒரு போட்டியில் பயன்படுத்துகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. 



எனவே, இரு சம பலம் வாய்ந்த அணிகள் இந்த 8ஆவது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். பாகிஸ்தான் அணி இதற்கு முன் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தனர். இங்கிலாந்து அணி அதற்கு அடுத்தாண்டு (2010) நடைபெற்ற மூன்றாவது உலகக்கோப்பையை கைப்பற்றியிருந்தனர். எனவே, இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. 


மேலும் படிக்க | ஐபிஎல் குறித்து கேள்வி... ஷாக் ஆன பாகிஸ்தான் கேப்டன் - பதில் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ