ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 2022 உலகக் கோப்பையின் சூப்பர் 12 போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளது.  உலக கோப்பை போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. உலகம் முழுவதும் சச்சின் VS சோயப்பைப் பார்க்கவும், பாண்டிங் VS லாராவைப் பார்க்கவும், வார்னே VS முரளியைப் பார்க்கவும் மக்கள் எப்போதுமே வெறித்தனமாக இருக்கிறார்கள். எனவே, 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 போட்டிகள் பற்றி பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை டி20 போட்டி கைவிடப்பட்டதா?


இந்தியா மற்றும் பாகிஸ்தான் 


தேதி: 23/10/2022


இடம்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்


இந்தியா VS பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இந்தியா VS பாகிஸ்தான் விளையாட்டைப் போல வேறு எந்த விளையாட்டும் டிக்கெட்டுகளை விற்பதில்லை. இம்மாதம் 23ஆம் தேதி இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது. இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து 


தேதி: 28/10/2022


இடம்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்


ஆஸ்திரேலியா VS இங்கிலாந்து போட்டியில் எப்போதும் அனல் பறக்கும். இரு அணிகளும் சிறந்த ஃபார்மில் உள்ளன மற்றும் உலகின் சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர் இங்கிலாந்தில் லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளார். 



ஆஸ்திரேலியா VS நியூசிலாந்து:


தேதி: 22/10/2022


இடம்: சிட்னி கிரிக்கெட் மைதானம்


ஆஸ்திரேலியா VS நியூசிலாந்து ஆட்டமும் பார்ப்பதற்கு விருந்தாக இருக்கிறது. நியூசிலாந்தில் பல குறைவாக மதிப்பிடப்பட்ட வீரர்கள் உள்ளனர். டெவோன் கான்வே ஒரு சிறந்த வீரர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல். கேன் வில்லியம்சன் சிறப்பாக செயல்படுவார், டிம் சவுத்தியும் சிறப்பாக செயல்படுவார். மறுபுறம், ஆஸ்திரேலிய அணியும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு மிரட்டி வருகிறது.  டிம் டேவிட் போன்ற ஆல்-ரவுண்டர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.


மேலும் படிக்க | புதிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி குறித்து கங்குலி என்ன பேசினார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ