Asif Ali Vs Fareed Ahmed: ஆசிய கோப்பை போட்டியின் போது, மோதலில் ஈடுபட்ட பாக்.வீரர் ஆசிப் அலி, ஆப்கன் வீரர் ஃபரீத் அகமது ஆகியோரின் போட்டி வருவாயில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அபராதம் விதித்து (ICC Code of Conduct) ஐசிசி அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெறுங்கி உள்ளது. சுப்பர் - 4 சுற்றில், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டைக்கு பிறகு சமாதானம்


முன்னதாக, நேற்று முன்தினம் (செப்.7) சுப்பர் - 4 சுற்றில், ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியின்போது, பாக் வீரர் ஆசிப் அலி, எதிரணி பந்துவீச்சாளரான ஃபரீத் அகமதை நோக்கி தனது பேட்டால் தாக்க வந்தார், பதிலுக்கு ஃபரீத் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் 19 ஆவது ஓவரில் (5ஆவது பந்து), ஆசிப் அலி, ஃபரீத் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரின் விக்கெட்டை கைப்பற்றியதின் மூலம், பாகிஸ்தான் அணிக்கு 9ஆவது விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடிய அகமதின் மீது, கோபமடைந்த ஆசிப் அலி அவரை தாக்க முற்பட்டார். 


மேலும் படிக்க: Asiacup 2022: ஆப்கானிஸ்தான் பவுலரை அடிக்க பாய்ந்த பாக்.வீரர்!


இந்த செயல், மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. நஸீம் ஷா, கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, பாகிஸ்தானை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். போட்டி முடிந்தபின், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆசிப் அலி, ஃபரீத் அகமது ஆகியோர் கைக்குலுக்கி சமாதானமாகினர். 


ஐசிசி விதிகள் மீறல்


இந்நிலையில், ஆசிப் அலி, ஃபரீத் அகமது ஆகிய இருவரும் போட்டியின் போது, ஐசிசியின் நிலை-1 விதிகளை மீறி செயல்பட்டதால், போட்டி வருவாயில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என ஐசிசி (International Cricket Council) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச போட்டியின் போது ஏற்றுக்கொள்ள முடியாத, புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் வகையிலான சைகையை ஆசிப் அலி பயன்படுத்தினார் (2.6 விதி, ஐசிசி) என்றும், சர்வதேச போட்டியின் போது ஏற்றுக்கொள்ள முடியாத உடல் தொடர்பில் ஃபரீத் ஈடுபட்டதாகவும் (2.1.12 விதி, ஐசிசி) தெரிவிக்கப்பட்டது.


மேலும், அவர்களின் போட்டி வருவாயில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் எனவும் இருவரும் தங்களின் தவறை ஏற்றுக்கொண்டதால் நேரில் ஆஜபாரி விளக்கமளிக்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.



மேலும் படிக்க: ஆப்கானிஸ்தான் கேப்டனின் கோபம்; ரசிகர்கள் ரகளை; யுஏஇ கடும் எச்சரிக்கை


ஆப்கன் பயிற்சியாளர் வருத்தம்


பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது, பார்வையாளர்கள் அரங்கிலும் பாகிஸ்தான், ஆப்கன் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில், அங்கிருந்த இருக்கைகள், மைதானத்திற்கு சொந்தமான பொருள்கள் போன்றவை அடித்து உடைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், ஆப்கனிஸ்தான் ரசிகர்களை நோக்கி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக, ஆப்கன் ரசிகர்களின் வருத்தம் தெரிவிப்பதாகவும், விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் எனவும் ஆப்கன் தலைமை பயிற்சியாளர் ரயீஸ் அஹம்ட்ஸாய் கூறினார்.


இறுதிப்போட்டிக்கு முன்னோட்டம்


ஆசிய கோப்பை சூப்பர் - 4 சுற்றின், கடைசி போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகளும் இன்று மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டி, இதே துபாய் மைதானத்தில் நாளை மறுநாள் (செப்.11) நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Asia Cup 2022: டிரெஸ்ஸிங் ரூமில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்; வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ