18:58 05-07-2019
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 100 பந்தில் 100 ரன்களை அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். நன்றாக ஆடிய பாபர் ஆசாம் 96(98) ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனதால், சதத்தை தவறவிட்டார். வங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 5 விக்கெட்டை கைப்பற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்களாதேஷ் அணி வெற்றி பெற 316 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் பங்களாதேஷ் அணி ஆட உள்ளது.


 



 



14:45 05-07-2019
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் வங்களாதேஷ் அணி பவுலிங் செய்ய உள்ளது.


 



 



லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.


தற்போது உலகக் கோப்பை போட்டி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன. ஐந்து அணிகள் உள்ளே உள்ளது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 4வது இடத்தில் 11 புள்ளியுடன் நியூசிலாந்து அணி உள்ளது. 5வது இடத்தில் 9 புள்ளியுடன் பாகிஸ்தான் உள்ளது. 


இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 11 புள்ளிகள் பெற்று விடும். ஆனால் நியூசிலாந்து அணியின் ரன்-ரேட் (+0.175) அதிகமாக உள்ளது. பாகிஸ்தான் அணியின் ரன்-ரேட் குறைவாக உள்ளது. 


அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 350 ரன்களை குவித்து, பின்னர் அந்த அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் 400 ரன்களை குவித்து, 316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். இந்த இக்கடான நிலையில், பாகிஸ்தான் அணி வாழ்வா சாவா என்ற நிலையில் பங்களாதேஷ் அணியை எதிர்க்கொள்ள இருக்கிறது.