WTC 2023: இனி இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியாவுக்கு வாய்ப்பே இல்லையா... ஆஸி., வெற்றியால் வந்த சோதனை!
WTC 2023: இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதிபெற்றது. இதனால், இந்திய அணிக்கு ஏற்பட்ட பாதகத்தை இங்கு பார்க்கலாம்.
World Test Championship 2023: ஒருநாள் போட்டி, டி20 போட்டி ஆகியவற்றில் இருக்கும் உலகக்கோப்பை தொடர் போன்றே, டெஸ்ட் போட்டிக்கு பிரத்யேகமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடர் சுமார் 2 இரண்டாண்டு காலமாக நடைபெறும். முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணி வென்றது. அதில், இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது.
இதையடுத்து, இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் (2021-2023 Cycle) தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி, லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டி பந்தயத்தில் இருந்தன. தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து, அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் வெற்றி, இந்திய அணியை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிகிறது.
இந்த போட்டிக்கு முன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், ஆஸ்திரேலிய அணி 66.67 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 64.06 சதவீத புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியாவின் பெற்றியை அடுத்து, அந்த அணி 68.52 சதவீதத்தை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், இந்திய அணி 60.29 சதவீத புள்ளிகளுக்கு சரிவடைந்துள்ளது. இருப்பினும், இந்தியா இரண்டாவது இடத்திலேயே நீடிக்கிறது.
இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல, வரும் மார்ச் 9ஆம் தேதி தொடங்கும், நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை, இந்தியா தோல்வியடைந்து, 2-2 என்ற கணக்கில் முடித்தால் பிரச்னைதான். ஏனென்றால், இந்த மாதத்தில் இலங்கை அணி நியூசிலாந்து உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இலங்கை இரண்டு போட்டிகளை வென்றும், இந்திய ஆஸ்திரேலியாவுடன் கடைசி போட்டியில் தோல்வியடைந்தால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள்தான் மோத வேண்டி வரும்.
மேலும், இந்தியா அடுத்த போட்டியை டிரா செய்தாலும், இந்திய அணியின் வாய்ப்பு சற்று பின்னடைவை சந்திக்கலாம் என்றும் தெரிகிறது. மறுப்புறம் நியூசிலாந்து இரண்டு போட்டிகளை வென்றுவிட்டால், இந்திய அணிக்கு வாய்ப்பு ஏற்படலாம். ஏனென்றால், நடப்பு நியூசிலாந்து இரண்டு போட்டிகளை வென்றாலும், நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி முன்னேற வாய்ப்பே இல்லை. அந்த அணி தற்போது, 27.27 சதவீத புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை என்பது, எத்தனை போட்டியில் வெற்றி என்றில்லாமல், அவர்கள் விளையாடிய டெஸ்ட் போட்டியில், வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றை கணக்கிட்டு சதவீத புள்ளிகள் அளிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் தரவரிசையில் அணிகள் இடம்பெறுகின்றன.
மேலும் படிக்க | பல் துலக்குவதே ஒரு சந்தோஷம்தான்... விபத்துக்கு பின் மனம் திறந்த ரிஷப் பண்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ