IND vs NZ: இந்திய அணியின் சாதனைக்கு வித்திட்ட நியூசிலாந்து டி-20 தொடர்!

IND vs NZ Highlights: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இந்திய அணியின் செயல்பாடு இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாருங்கள் இந்திய அணி செய்த சாதனைகள் என்னனென்ன? குறித்து பார்ப்போம்.

Written by - முனைவர் பலராமன் சுப்புராஜ் | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 2, 2023, 02:58 PM IST
  • டி-20 போட்டி தரவரிசைப் பட்டியலில் 267 புள்ளிகளுடன் 'நம்பர்-1'
  • ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் 114 புள்ளிகளுடன் முதலிடம்.
  • டெஸ்ட் போட்டித் தர வரிசைப் பட்டியலில் 115 புள்ளிகளுடன் 2-ம் இடம்.
IND vs NZ: இந்திய அணியின் சாதனைக்கு வித்திட்ட நியூசிலாந்து டி-20 தொடர்! title=

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என்னும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் சர்வதேச டி-20 போட்டி தரவரிசைப் பட்டியலில் 267 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது 'இந்திய அணி'. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணி 266 புள்ளிகளுடன், மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் அணி 258 புள்ளிகளுடன், நான்காம் இடத்தில் தென்னாப்ரிக்கா அணி 256 புள்ளிகளுடன், ஐந்தாம் இடத்தில் நியூசிலாந்து அணி 252 புள்ளிகளுடன், ஆறாம் இடத்தில் ஆஸ்திரேலிய அணி 251 புள்ளிகளுடன், ஏழாம் இடத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 236 புள்ளிகளுடன், எட்டாம் இடத்தில் இலங்கை அணி 236 புள்ளிகளுடன், ஒன்பதாம் இடத்தில் வங்கதேசம் அணி 222 புள்ளிகளுடன், பத்தாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி 217 புள்ளிகளுடன் உள்ளன. மேலும், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தர வரிசைப் பட்டியலில் 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டெஸ்ட் போட்டித் தர வரிசைப் பட்டியலில் 115 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் சொந்த மண்ணில் 50 'டி-20' போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்னும் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. மேலும் இந்திய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டி-20 தொடர்களில் வெற்றி பெற்ற அணியாகவும் திகழ்கிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று விதமான (டெஸ்ட், ஒரு நாள், 'டி-20' ) கிரிக்கெட் போட்டிகளில் 56 தொடர்களில் இந்தியா பங்கேற்றுள்ளது. இதில், இந்திய அணி 48 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்திய அணி 2019 ஆம் ஆண்டு முதல் தனது சொந்த மண்ணில் மூன்று விதமான (டெஸ்ட், ஒரு நாள், 'டி-20' ) கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதில் 25 தொடர்களைக் கைப்பற்றிய முதல் அணி என்னும் சாதனையையும் தனதாக்கியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 168 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தனது அதிகபட்ச ரன் வித்தியாச வெற்றியை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணி 234 ரன்களை எடுத்தது. இது டி- 20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 5 ஆவது அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.

மேலும் படிக்க: ஒரே ஒரு போட்டி தான்.. மொத்த சாதனையும் குளோஸ்! சரித்திரம் படைத்த ஷுப்மான் கில்

சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராத் கோஹ்லி ஆகியோர் மூன்று விதமான (டெஸ்ட், ஒரு நாள், 'டி-20') கிரிக்கெட்டிலும் சதம் அடித்தவர்களாக உள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய டி-20 போட்டியில் சுப்மன் கில் சதம் (126) விளாசினார். இதன் மூலம் மூன்று விதமான (டெஸ்ட், ஒரு நாள், 'டி-20' ) கிரிக்கெட்டிலும் சதம் அடித்தவர் பட்டியலில் சுப்மன் கில் தன்னை ஐந்தாவது இந்திய வீரராக இணைத்துக் கொண்டார். சர்வதேச 'டி-20' கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் வீராத் கோஹ்லி 122 ரன்களுடனும், இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா 118 ரன்களுடனும், மூன்றாம் இடத்தில் சூர்ய குமார் யாதவ் 117 ரன்களுடனும் எடுத்திருந்தனர். நேற்றைய போட்டியில் சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இதன் மூலம் சர்வதேச 'டி-20' ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச 'டி-20'ல் ஒரு போட்டியில் இது இவரது முதல் சதமாகும். மேலும் இது இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்னும் பெருமையையும் அதிகபட்ச ரன் என்னும் சாதனையையும் ஒருங்கே பெற்றுத் தந்துள்ளது.

மேலும் படிக்க: IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!

நியூசிலாந்து அணியில் உள்ள 11 வீரர்களில் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இரண்டு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணில் ஆட்டம் இழந்தனர். 66 என்னும் இரட்டை இலக்க எண்ணில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்துள்ளது. மேலும், நியூசிலாந்து அணியில் உள்ள 11 வீரர்களில் 9 வீரர்கள் கேட்ச் மூலம் வெளியேறினர். இதனால், இந்திய அணியின் பீல்டிங் பேசும்படியாக அமைந்தது. இந்திய அணியின் செயல்பாடு கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இச்சிறப்பான செயல்பாட்டோடு இந்திய அணி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

மேலும் படிக்க: ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய 5 வீரர்கள் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News