நடப்பு சீசனின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று (இந்திய நேரப்படி) நடைபெற்ற இறுதிப்போட்டியில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றிபெற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில், துனிசியா நாட்டு வீராங்கனை ஓன்ஸ் ஜபீருடன் மோதிய அவர், 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்டுகளில் வென்று இந்தாண்டின் தனது 2ஆவது கிராண்ட்ஸ்லாமையும், ஒட்டுமொத்தமாக 3ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.    


மேலும் படிக்க | சச்சின் மகளை தவிர்த்து மற்றொரு நடிகையை டேட்டிங் செய்யும் கில்?


இந்தாண்டின் மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் தொடரிலும் இகா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். மேலும், 2016ஆண்டிற்கு பிறகு மகளிர் பிரிவில் ஒரே சீசனில் 2 கிராண்ட்ஸ்லாமை வென்றவர் என்ற பெருமையை இகா தற்போது பெற்றுள்ளார். 


21 வயதான இகா, இந்த வெற்றியை 1 மணிநேரம் 52 நிமிடங்கள் வரை போராடி பெற்றார். அவர் விளையாடிய கடந்த 10 இறுதிப்போட்டிகளிலும் ஒரே செட்டை கூட இழக்காமல் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஓபன் தொடரை வென்றதற்கு, 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 20.71 கோடி) காசோலை இகாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.



மறுமுனையில், இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் ஆப்பிரிக்காவில் இருந்து கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முதல் பெண்மணி என்ற சாதனையை ஜபீர் தவறவிட்டுள்ளார். இத்தொடருக்கு முன்னர் நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியிலும் ஜபீர் தோல்வியடைந்திருந்தார். 


வெற்றிக்கு பிறகு பேசிய இகா, பரிசுத்தொகையை காசோலையாக அல்லாமல் கையில் பணமாக கொடுத்திருக்கலாம் என கூற டென்னிஸ் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. மேலும் பேசிய அவர், 'இது நான் நிச்சயமாக எதிர்பார்க்காத ஒன்று. எனக்கு வானமே எல்லை என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது' என்றார்.



ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடைபெற இருக்கிறது. இதில், 19 வயதான ஸ்பெயன் வீரர் கார்லோஸ் அல்கார்ஸ், நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் தங்களின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்காக மோத உள்ளனர்.


மேலும் படிக்க | அரையிறுதியில் அசத்திய இளம் வீரர் கார்லோஸ்; இறுதிப்போட்டியில் காத்திருக்கும் காஸ்பர் ரூட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ