கிரிக்கெட்டில் கலவரம், பிட்சில் பரபரப்பு: Ind vs Aus போட்டியில் நடந்தது என்ன
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியின் போது மைதானத்தில் நுழைந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் சர்வதேச போட்டி நடைபெறும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு அர்ப்பாட்டக்காரர்கள் திடீரென நுழைந்தனர். அவர்கள் அதானி குழுமத்திற்கு எதிராக "NO $ 1B ADANI LOAN” என்ற பதாகையைப் பிடித்தவாறு மைதானத்திற்குள் வந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்திருந்த டி-ஷர்டுகளின் முன்பக்கத்தில் “StopAdani” என்றும் பின் பக்கத்தில் “Stop Coal” என்றும் எழுதி இருந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (Australia) இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்தை கண்டித்து இப்படி செய்தனர்.
இந்திய (India) பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆஸ்திரேலிய இன்னிங்சின் ஆறாவது ஓவரைப் போட தயாராகும் தருவாயில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் இருவரையும் பாதுகாவலர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். ஆச்சரியப்படும் விதமாக, பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கை மிகவும் மெதுவாகவும், உற்சாகமற்றதாகவும் இருந்தது. அவர்கள் இதில் உடனடியாகத் தலையிடாமல், நேரம் கழித்தே உள்ளே வந்தனர். இது, இந்த தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், "யாரோ இருவர் மைதானத்திற்குள் வந்து எதற்காகவோ பிரச்சாரம் செய்கிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவர்களை அழைத்துச் செல்லும் வரை காத்திருப்போம்." என்றார்.
ALSO READ: Australia vs India, 1st ODI: தடுமாறும் இந்தியா; வெற்றி ஆஸ்திரேலியா பக்கம்
சில ஆர்ப்பாட்டக்காரர்கள், ஸ்டாப் அதானி (Adani) என்ற பெயரில், போட்டி தொடங்குவதற்கு முன்பு சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே காணப்பட்டனர்.
"இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் முதல் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான இந்திய வரி செலுத்துவோர், சுற்றுச்சூழலுக்கு எதிராக அந்த பில்லியனர் துவக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு தங்கள் வரிகளை ஒப்படைக்க ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பரிசீலித்து வருவதை அறிய வேண்டும்" என்று ஸ்டாப் அதானியின் அறிக்கை கூறுகிறது.
SCG-யின் மொத்த அளவில் 50 சதவீத ரசிகர்கள் வந்து ஒரு நாள் போட்டியைக் காண கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia) அனுமதித்துள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR