India tour of Australia, 2020-21: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணி, தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஏற்கனவே முதல் முடிந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-30 முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne Cricket Ground) நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று தோல்வியை பதிவு செய்தது. இந்தநிலையில், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலிய நாட்டை விட்டு வெளியேறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் அஜின்கியா ரஹானேவிடம் (Ajinkya Rahane) கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா (Anushka Sharma) கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அடுத்த மாதம் ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதால், அவர் நாடு திரும்பியுள்ளார். 


ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (Board of Control for Cricket in India) விராட் கோலி விடுப்பு கோரியிருந்ததால், அடிலெய்டில் டெஸ்டில் மட்டுமே விளையாட பி.சி.சி.ஐ அனுமதித்தது.


ALSO READ |  IND vs AUS: மீண்டும் COVID-19 அதிகரித்து வருவதால், சிட்னி டெஸ்ட் நடைபெறுவதில் நெருக்கடி


நாடு திரும்பிச் செல்வதற்கு முன்பு, 32 வயதான அவர் தனது தலைமையிலான அணியினரைச் சந்தித்து, தொடரின் எஞ்சிய போட்டிகளில் எப்படி விளையாடுவது உட்பட அனைத்து விதமான ஆலோசனைகளை வழங்கி அணியை ஊக்கப்படுத்தி உள்ளார். விராட் கோலி இல்லாத நிலையில் அணியை வழிநடத்தும் பொறுப்பை ரஹானேவிடம் (Ajinkya Rahane) ஒப்படைக்கப்பட்டது.


மெல்போர்னில் நடைபெறும் இரண்டாவது போட்டி இந்தியாவுக்கு முக்கியமான போட்டியாக இருப்பதால், வீரர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, டெஸ்டுக்கு செல்லும் முன்பு வீரர்களை நேர்மறையான மனநிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விராட் அணியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.


ALSO READ |  மும்பை கிளப்பில் முன்னாள் கிரிக்கெட்டர் Suresh Raina கைது: விவரம் உள்ளே


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR