மும்பை கிளப்பில் முன்னாள் கிரிக்கெட்டர் Suresh Raina கைது: விவரம் உள்ளே

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராந்த்வா உட்பட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 22, 2020, 01:53 PM IST
  • மும்பை கிளப்பில் நடந்த சோதனையில் சுரேஷ் ரெய்னா கைது.
  • சுசேன் கான், குரு ராந்த்வா உள்ளிட்ட பிரபலங்களும் கைது செய்யப்பட்டனர்.
  • கோவிட் விதிமுறைகளை மீறியதற்கான நடவடிக்கை.
மும்பை கிளப்பில் முன்னாள் கிரிக்கெட்டர் Suresh Raina கைது: விவரம் உள்ளே

மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மும்பை டிராகன்ஃபிளை கிளப்பில் நடத்தப்பட்ட சோதனையில், ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் குரு ராந்த்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சோதனையில் மும்பை கிளப்பின் ஏழு ஊழியர்கள் உட்பட மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை கிளப்பில் நடந்த சோதனையில் பாலிவுட் பிரபலம் சுசேன் கானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் கோவிட் விதிமுறைகளை (COVID Restrictions) மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்தவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) மற்றும் பாடகர் குரு ராந்த்வா ஆகியோரும் அடங்குவர் என சாஹர் காவல் நிலைய மூத்த அதிகாரி தெரிவித்தார். பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராந்த்வா உட்பட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை (Mumbai Police) தெரிவித்துள்ளது. IPC-யின் பிரிவு 188 (அரச ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை), பிரிவு 269 (உயிருக்கும் உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய் பரவுவதற்கு வழிவகுக்கக்கூடிய செயலில் சட்டவிரோதமாக அல்லது அலட்சியமான முறைகளில் ஈடுபடுவது) பிரிவு 34 (பொதுவான நோக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்பட்ட செயல்கள்) ஆகிய பிரிவுகளில் இவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் வீரர் நடராசன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்?

அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்கு அப்பால் ஸ்தாபனத்தை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கும், COVID-19 விதிமுறைகளைப் பின்பற்றாததற்கும் டிராகன்ஃபிளை பப்பில் நடந்த சோதனைக்குப் பின்னர் இந்த கைதுகள் செய்யப்பட்டன.

திங்களன்று, மகாராஷ்டிரா அரசாங்கம், பிரிட்டனில் (Britain) பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி நிறுவனங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.

புத்தாண்டுக்கு முன்னதாக, மகாராஷ்டிரா அரசு (Maharashtra Government) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதிலும் குறிப்பாக மும்பையில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 5 வரை பொது நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ALSO READ: ஒரு கிட்னியுடன் உலகை வென்றேன்: Tweet மூலம் அதிரடியாய் அறிவித்த Anju Bobby George

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News