India vs England: இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கியது. அபாரமாக பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது. தனது முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய இந்தியா ஆட்ட நேர இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்களை எடுத்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லை துவக்கத்திலேயே இழந்த போதிலும், ரோஹித் சர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் நின்று ஆடினர். டாஸ் வென்ற கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததையடுத்து இங்கிலாந்து 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இன்றைய ஆட்ட முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 24/1. ரோகித் 8 ரன்களுடனும் புஜாரா 15 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.


முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி (England Team) மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. எனினும், இந்தியா பேட்டிங் செய்தபோது, இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவின் முதல் விக்கெட்டை எடுத்தார். ரன் ஏதும் எடுக்காமலேயே இந்தியா ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தது.


எனினும் ரோஹித் ஷர்மா மற்றும் புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மீதமிருந்த 11.3 ஓவர்களை எந்த விக்கெட்டையும் இழக்காமல் நிதானமாக ஆடினர்.


ALSO READ: Ind vs Eng: பும்ரா விடுப்பு எடுத்ததன் காரணம் என்ன? எல்லாம் நல்ல விஷயம்தான்!!


முன்னதாக, இந்தியா பந்து வீசிய போது மீண்டும் தனது அபாரமான திறமையை வெளிக்காட்டிய அக்சர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin) மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் முக்கியமான விக்கெட்டை முகமது சிராஜ் எடுத்தார். அஸ்வின் ஒல்லி போப்பின் விக்கெட்டை வீழ்த்தினார்.


போப்பின் விக்கெட் வீழ்ந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியால் ஆட்டத்தில் மீண்டு வர முடியவில்லை. 166/5 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு மற்ற அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது அமர்வு தொடங்கியய் சில நிமிடங்களிலேயே அஸ்வின் போபின் விக்கெட்டை எடுத்தார்.


இந்திய அணியின் (Team India) மூத்த ஆஃப் ஸ்பின்னர் பின்னர் 66 வது ஓவரில் பென் ஃபோக்ஸை வீழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்து, அக்சர் டேனியல் லாரன்ஸ் மற்றும் டோமினிக் பிஸ்ஸின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 200 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி சுருண்டு விடும் என எண்ணப்பட்ட நிலையில், ஜாக் லீச் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்தின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றனர்.


இந்தியா இந்த போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கின்றது. வீரர்களிடையே இருக்கும் உற்சாகம் கண்கூடாகத் தெரிகின்றது.


சுருக்கமான ஸ்கோர்:


இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 205 (பென் ஸ்டோக்ஸ் 55; ஆக்சர் படேல் 4-68, ரவிச்சந்திரன் அஸ்வின் 3-47);


இந்தியா முதல் இன்னிங்ஸ்: 24/1 (சேதேஸ்வர் புஜாரா 15 *; ஜேம்ஸ் ஆண்டர்சன் 1-0)


ALSO READ: எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR