Ind vs Eng: பும்ரா விடுப்பு எடுத்ததன் காரணம் என்ன? எல்லாம் நல்ல விஷயம்தான்!!

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பும்ரா ஓய்வில் இருந்தார். அகமதாபாதில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2021, 01:26 PM IST
  • ஜஸ்பிரீத் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  • அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
Ind vs Eng: பும்ரா விடுப்பு எடுத்ததன் காரணம் என்ன? எல்லாம் நல்ல விஷயம்தான்!! title=

புதுடெல்லி: இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

ஜஸ்ப்ரீத் பும்ரா திருமணம் செய்து கொள்ளப்போவதால் சில நாட்கள் விடுமுறை கேட்டுள்ளார் என்று இப்பபோது தெரிய வந்துள்ளது.

ஏ.என்.ஐ.யுடன் பேசிய BCCI-யின் வட்டாரங்கள், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. திருமண ஏற்பாடுகளை கவனிக்கவே அவர் விடுப்பு எடுத்துள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

"அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க தனக்கு விடுப்பு வேண்டும் என்றும் அவர் BCCI-யிடம் தெரிவித்தார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ALSO READ: IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்

27 வயதான பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இவற்றில் அவர் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பும்ரா (Jasprit Bumrah) ஓய்வில் இருந்தார். அப்போட்டியில் அவர் விளையாடவில்லை. அகமதாபாதில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆடினார். ஆனால், அந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களே பெரும்பான்மையான விக்கெட்டுகளை வீழ்த்தியதால், பும்ரா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி-20 தொடருக்கும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (Ind vs Eng) இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாங்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அல்லது போட்டியை டிரா செய்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாதில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இம்மாதம் 4 ஆம் தேதி துவங்குகிறது.

ALSO READ: எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News