IND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்

 மோட்டேராவில் இந்தியாவின் வியத்தகு பேட்டிங் சரிவுக்குப் பிறகு இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் Michael Vaughan.

Written by - ZEE Bureau | Last Updated : Feb 25, 2021, 06:24 PM IST
  • முதல் நாள் போட்டியில் 112 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
  • அப்போது இங்கிலாந்து தோல்வியடையும் மைக்கல் வாகன் கணிப்பு வெளியிட்டார்
  • இன்று இங்கிலாந்து பிங்க் பால் டெஸ்டில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளார்
IND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்

அகமதாபாத்: மோட்டேராவில் இந்தியாவின் வியத்தகு பேட்டிங் சரிவுக்குப் பிறகு இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் Michael Vaughan.

முதல் நாளில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் இங்கிலாந்து தோல்வியடையும் என்று கூறிய வாகன், பகலிரவு ஆட்டமாக நடைபெறும் பிங்க் பால் டெஸ்டில் இந்தியா வெற்றி பெறும் என்று கணித்தார்.  

மோட்டேராவில் நடந்த முதல் நாள் போட்டியில் இந்தியா வெல்லும் என்று கணிப்பு வெளியிட்ட அவர், இரண்டாம் நாளில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரிந்ததை அடுத்து வியாழக்கிழமை தனது கணிப்பை மறுவரை செய்தார்.

Also Read | புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் டக் அவுட் ஆனது 

எட்டு விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி இன்னும் 46 ரன்களை மட்டுமே குவிக்க முடியும் என்று அவர் கருதுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார்.
 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் 112 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்த பின்னர் தோல்வியடையும் என்று கூறிய வாகனின் கணிப்பு மாறிவிட்டது.  

இரண்டாவது இன்னிங்சின் முதல் ஓவரில் இந்தியா ஏற்கனவே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால், வாகனின் கணிப்பு மீண்டும் மாறலாம். ஆக்சர் படேல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மீண்டும் இந்திய அணிக்கு வாய்ப்புகள் சாதகமாகக்கூடும்.

 

ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

More Stories

Trending News