India vs England, Fourt Test: இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் சனிக்கிழமையன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஜோடி 135 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை பேக் செய்து திருப்பி அனுப்பியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வெற்றியுடன் இந்தியா இங்கிலாந்து (Ind vs Eng) இடையில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம், ஜூன் மாதம் லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்தியா தகுதி பெற்றுள்ளது. அக்சர் மற்றும் அஸ்வின் இருவரும் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற காரணமாக இருந்தனர்.


முன்னதாக, இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இந்தியா அணி (Team India) 7 விக்கெட் இழப்புக்கு 294 என்ற ஸ்கோருடன் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அரை சதத்தை அடித்த வாஷிங்டன் சுந்தரரும் அக்சர் படேலும் 8 ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 106 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் இந்தியா ஒரு வலுவான நிலையை எட்ட முடிந்தது.


ALSO READ: எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell


எனினும், வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடிக்க முழு முனைப்புடன் ஆடிக்கொண்டிருந்த வேளையில், மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்ததால், அவரால் சதமடிக்க முடியாமல் போனது.


இந்தியா 365 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


தனது இரண்டாவது இன்னிங்கசை ஆடத் துவங்கிய இங்கிலாந்தின் நிலை பரிதாபமாக முடிந்தது. 135 ரன்களுக்கு இங்கிலாந்து அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளையும் எடுத்து இங்கிலாந்து அணியை வந்த வேகத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.


ரிஷப் பந்த் ஆட்ட நாயகனாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.


சுருக்கமான ஸ்கோர் கார்ட்:


இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 205


இந்தியா முதல் இன்னிங்ஸ்: 365


இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 135


ALSO READ: IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR