IPL 2021: இந்த ஆண்டிற்கான IPL போட்டிகளை ஆறு நகரங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI முடிவுசெய்துள்ளது. இந்த முடிவு அணி உரிமையாளர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என தெரிய வருகிறது.
முன்னதாக, IPL 2021-ஐ மகாராஷ்டிரா மற்றும் அகமதாபாத்தில் நடத்த BCCI திட்டமிட்டிருந்தது. ஆரம்பத் திட்டத்தின்படி, போட்டியின் லீக் கட்டம் மும்பை மற்றும் புனேவில் நடைபெறவிருந்தது. அதன்பின்னர் அகமதாபாத்தில் புதுப்பிக்கப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிளேஆப் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், சமீபத்திய முன்னேற்றங்களின்படி, BCCI, மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு நகரங்களை வரவிருக்கும் IPL போட்டிகளை நடத்தும் இடங்களாக பட்டியலிட்டுள்ளது. முதலில் தான் எடுத்த முடிவிலிருந்து BCCI மாறியது அணி உரிமையாளர்களுக்கு பிடிக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் தீர்மானிக்கப்பட்ட மைதானங்களின் அடிப்படையில் அணிகள் IPL ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இது ஒரு இக்கட்டான விஷயம்தான். ஒன்று அல்லது இரண்டு நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்கான முந்தைய யோசனை மிகவும் சிறப்பாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, 2020 ஆம் ஆண்டு IPL மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. அது நல்ல முறையில் நடந்தது. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை அல்லது பூனேவில் நடக்கும் என்றும், ப்ளேஆஃப்-கள் அகமதாபாதில் நடக்கும் என்றும் எண்ணி, அதற்கேற்றபடி அணிகள் தங்கள் ஏற்பாடுகளை துவக்கியிருந்தன. அந்த திட்டங்களை இப்போது மாற்ற வேண்டும். இதைப் பற்றி தெளிவான விவரங்கள் அணி உரிமையாளர்களுக்கு தெரிய வேண்டும், அதுவும் விரைவிலேயே தெரிய வேண்டும்” என்று ஒரு அணியின் நிர்வாக உறுப்பினர் கூறினார்.
ALSO READ: Watch Video: வைரல் ஆன அம்பயரின் ரியாக்ஷன், சலிக்காமல் சிரிக்கும் நெட்டிசன்கள்
IPL 2021 ‘ஹோம் அண்ட் அவே’ வடிவத்திலேயே நடக்கும்: அறிக்கைகள்
IPL 2021 ஒரு கிளஸ்டர்-கேரவன் வடிவத்தில் நடைபெறும் என்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு செய்யப்பட்டன. இதில் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். அவர்கள் ஒரே மைதானத்தில் குறிப்பிட்ட போட்டிகளில் ஆடிவிட்டு மற்ற மைதானத்திற்கு செல்வார்கள் என முடிவெடுக்கப்பட்டது. எனினும், IPL-ல் வழக்கமாக நடப்பது போலவே, ஹோம் அண்ட் அவே முறையிலேயே போட்டிகள் நடைபெறும் என தற்போது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“போட்டியின் வடிவம் மாறாது. ஹோம் அண்ட் அவே வடிவத்தில்தான் போட்டிகள் இருக்கும். ஒவ்வொரு அணியும் ஏழு அணிகளை ஹோஸ்ட் செய்வார்கள். மற்ற 7 பேரின் ஹோம் மைதானத்தில் விளையாடுவார்கள். அதாவது ஒவ்வொரு ஆண்டும் இருப்பது போலவே 60 போட்டிகள் நடைபெறும்.” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
IPL -லின் 14 வது சீசன் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மற்ற நகரங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR