IND vs ENG: இன்றைய போட்டியில் இந்தியா இந்த தவறை மட்டும் பண்ணவே கூடாது!
IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் அஸ்வினை கண்டிப்பாக விளையாடும் 11 அணியில் எடுக்க வேண்டாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
Ind vs Eng: 2023 ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பையின் 6வது போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்று அக்டோபர் 29, ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறவுள்ள நிலையில், லக்னோவின் பிட்ச் சுழலுக்கு சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியா பிளெயின் 11ல் சில மாற்றங்களைச் செய்யலாம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் களமிறங்குவார் என கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 2023 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அஸ்வின், மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இடம்பெறவில்லை.
மேலும் படிக்க | IND vs ENG: சிராஜ்க்கு பதில் அஸ்வின்? இந்திய அணியின் ப்ளெயின் 11 இதுதான்!
இருப்பினும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அஸ்வினை விளையாட வைக்க வேண்டாம் என்று இந்தியாவை எச்சரித்துள்ளார். மேலும் உலகக் கோப்பைக்கு பயன்படுத்தப்படும் லக்னோ ஆடுகளம் இந்தியன் பிரீமியர் லீக்கின் போது பயன்படுத்தப்பட்டது அல்ல என்று கூறியுள்ளார். ஆகாஷ் சோப்ரா, தனது யூடியூப் சேனலில் பேசுகையில், அஸ்வினை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2023 உலகக் கோப்பை மோதலில் இந்தியா ரவிச்சந்திரன் அஷ்வினை விளையாடும் லெவன் அணியில் களமிறக்கினால் அது எதிர்விளைவாக இருக்கும் என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார். " இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 3 ஸ்பின்னர் உடன் விளையாட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
லக்னோ மைதானத்தை பற்றி பேசுகையில். இது பெரிய மைதானம், எனவே ஒரு ஆஃப் ஸ்பின்னரை விளையாடுவோம் 11ல் எடுக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஐபிஎல்-லில் நிறைய பந்துகள் நன்றாக திரும்பியது. அதனால் ஆஃப் ஸ்பின்னர் விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் இது ஐபிஎல்லில் பயன்படுத்திய பிட்ச் இல்லை. ஐபிஎல்-ல் இருந்த கருப்பு-மண் ஆடுகளம் தற்போது இல்லை. இது இப்போது பவுன்ஸ் மற்றும் வேகம் கொண்ட சிவப்பு-மண் ஆடுகளமாக உள்ளது. டியூவும் பின்னர் வருகிறது. நீங்கள் இரண்டாவது பவுலிங் செய்தால் இதனை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களிடம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள், மேலும் பந்து ஈரமாகிவிடும், எனவே நீங்கள் போட்டியை இழக்கலாம்" என்று அவர் கூறினார்.
இந்தியா புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது, இதுவரை விளையாடிய போட்டியில் தோல்வியடையாத ஒரே அணியாக இருக்கும் அதே வேளையில், இங்கிலாந்து தனது முதல் 5 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று அட்டவணையில் கடைசி இடத்தில் தள்ளாடுகிறது. இங்கிலாந்து அணிக்கு, உலக கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது, இதனால் இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் .
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா.
மேலும் படிக்க | மைதானத்தில் லேசர் லைட் ஷோ: கடுப்பான மேக்ஸ்வெல், குஷியான வார்னர் - என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ