மைதானத்தில் லேசர் லைட் ஷோ: கடுப்பான மேக்ஸ்வெல், குஷியான வார்னர் - என்ன மேட்டர்?

ICC World Cup 2023: உலகக் கோப்பை போட்டியின்போது, மைதானத்தில் Laser Light Show நிகழ்வு நடைபெறும். இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், வார்னர் ஆகியோர் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2023, 11:43 AM IST
  • ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
  • மேக்ஸ்வெல் 40 பந்தில் சதம் அடித்து, உலகக் கோப்பையில் அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
  • டேவிட் வார்னர் நேற்றைய போட்டியில் சதம் அடித்து மிரட்டினார்.
மைதானத்தில் லேசர் லைட் ஷோ: கடுப்பான மேக்ஸ்வெல், குஷியான வார்னர் - என்ன மேட்டர்? title=

ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடர் என்றாலே அது ஆடவர் உலகக் கோப்பையோ, மகளிர் உலகக் கோப்பையோ ஆஸ்திரேலிய அணிதான் ஆதிக்கம் செலுத்தும். மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 7 முறையும், ஆடவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா 5 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதன்மூலமே, அதன் ஆதிக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, 1999, 2003, 2007 ஆடவர் உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வரிசையாக கைப்பற்றியதை வேறெந்த அணியாலும் இனி செய்ய இயலுமா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. 

இப்படியிருக்க, நடப்பு ஆடவர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி (Australia Cricket Team) தனது முதலிரு போட்டிகளில் இந்தியாவிடமும், தென்னாப்பிரிக்காவிடமும் தோல்வியடைந்தது. ஆனால், அதன்பின் தற்போது அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வென்று அசத்தியிருக்கிறது. இலங்கை, பாகிஸ்தானை அணிகளை வீழ்த்திய அந்த அணி நேற்று நெதர்லாந்தை (AUS vs NED) மொத்தமாக ஆதிக்கம் செலுத்தி அசாத்திய வெற்றியை படைத்தது. 

பேட்டிங்கில் 399 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அணி, 21 ஓவர்களிலேயே நெதர்லாந்து அணி 90 ரன்களுக்கு சுருட்டியது. மேக்ஸ்வெல் நேற்று உலகக் கோப்பையில் அதிவேக (40 பந்துகளில்) சதத்தை அடித்து மிரட்டினார். அவர் மொத்தம் 44 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் என 106 ரன்களை அடித்தார். மேலும், அந்த அணியில் டேவிட் வார்னர் 104, ஸ்மித் 71, லபுஷேன் 62 ரன்களை குவித்தனர். பந்துவீச்சில் ஆடம் ஸாம்பா 3 ஓவர்களை மட்டும் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நான்கு விக்கெட்டுகளை டெயிலெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருதை மேக்ஸ்வெல் வென்றார். 

மேலும் படிக்க | வார்னர் கிளாஸ்.. மேக்ஸ்வெல் சரவெடி.. ஜாம்பா மெர்சல்..! நெதர்லாந்தை பொட்டலம் கட்டிய ஆஸ்திரேலியா

இது ஒருபுறம் இருக்க போட்டி முடிந்தபின் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) டெல்லி மைதானத்தின் Laser Show நிகழ்வை தாக்கி பேசினார். அவர் கூறியதாவது,"ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் பிக் பாஷ் போட்டியின் போது நடந்ததைப் போன்று இந்த Light Show நிகழ்விலும் ஏற்பட்டது. அது எனக்கு அதிர்ச்சியூட்டும் தலைவலியைக் கொடுத்தது போல் உணர்ந்தேன், மேலும் என் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் ஆனது. கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இது ஒரு முட்டாள்தனமான யோசனை என்று நான் நினைக்கிறேன். இது கண்களுக்கு அடிக்கும்போது, உங்கள் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் எடுக்கும், நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்தோம் என்று நினைக்கிறேன், பெர்த் ஸ்டேடியம் Light Show முட்டாள்தனமானது.

"நான் பேட்டிங்கிற்கு மறுமுனையில் இருந்தேன், என் கண்கள் மீண்டும் இயல்பாக மாறுவதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. எனக்கு தலைவலி இருப்பது போல் உணர்ந்தேன் - அதனால் நான் முடிந்தவரை மூடி மறைக்க முயற்சிக்கிறேன், அதை புறக்கணிக்கிறேன். ஆனால் இது ஒரு பயங்கரமான, மோசமான யோசனை. ரசிகர்களுக்கு கொண்டாடத்தக்கது என்றாலும், வீரர்களுக்கு ஏற்புடையது இல்லை" என்றார். மேக்ஸ்வெல் இப்படி Laser Light Show நிகழ்வை தாக்கிய சில மணிநேரங்களில், Light Show நிகழ்வுக்கு ஆதரவளித்து மேக்ஸ்வெல்லின் சக நாட்டு வீரர் டேவிட் வார்னர் (David Warner) பதிவிட்டுள்ளார். 

அதில்,"Light Show நிகழ்வை நான் மிகவும் விரும்பினேன், என்ன ஒரு அற்புதமான சூழ்நிலை. இது அனைத்தும் ரசிகர்களுக்கானது. நீங்கள் இல்லாமல், நாங்கள் விரும்புவதை எங்களால் செய்ய முடியாது" என பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | World Cup 2023: “உலக கோப்பை போலி டிக்கெட்” கவனமாக இருங்கள்! உங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News