IND vs ENG T20I 4: இந்திய வெற்றிக்கு வெளிச்சம் தந்த சூர்யகுமார், பாண்ட்யா
நான்காவது T20I போட்டிகளில் அருமையாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு துணைபோன ஹர்டிக் பாண்ட்யாவும், சூர்யகுமாரும் பிரகாசிக்கிறார்கள்.
IND vs ENG: நான்காவது T20I போட்டிகளில் அருமையாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு துணைபோன ஹர்டிக் பாண்ட்யாவும், சூர்யகுமாரும் பிரகாசிக்கிறார்கள்.
ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் பந்தை சிக்ஸராக்கிய சூர்யகுமார் யாதவ் தனது சர்வதேச கணக்கைத் திறந்தார். 183.87 ஸ்ட்ரைக் வீதத்தில் பேட்டிங் செய்து சூப்பர் பேட்ஸ்மேன் என்று பாராட்டுக்களை பெற்ற சூர்யகுமார், ஆறு பவுண்டரிகளை விளாசினார்.
அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது T20I போட்டியில் இந்தியாவின் எட்டு ரன்கள் வித்தியாச வெற்றிக்கு, தனக்குக் கிடைத்த வாய்ப்பை சூர்யகுமார் சரியாக பயன்படுத்தியதே காரணம்.
சர்வதேச போட்டிகளில் இந்த தொடர் மூலமாக அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். Sam Curran வீசிய பந்தில் சூர்யகுமார் ஆட்டமிழந்ததும் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
இந்தியா தனது 20 ஓவர்களில் 185/8 என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க வலது கை பேட்ஸ்மேன் சூர்யகுமார் மட்டுமல்ல, ஸ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பும் முக்கியமானது. ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 18 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் ஸ்ரேயஸ் ஐயர்.
Also Read | டி 20 தொடர் யாருக்கு? இந்தியாவுக்கு முக்கியமான நான்காவது போட்டி
இந்தியாவின் 185/8 க்கு பதிலளிக்கும் விதமாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி 177/8 என்ற அளவில் மட்டுப்பட்டது. இங்கிலாந்து வீரரும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அற்புதமாக விளையாடினார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்து வீசத் தெரிவுசெய்தபோதிலும், முந்தைய நிகழ்வுகளைப் போலல்லாமல், இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இரட்டை இலக்க ரன்களை எடுத்தார். ஆனால் 17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த ராகுலை ஸ்டோக்ஸ் அவுட்டாக்கினார்.
நான்காவது ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் கேட்ச் மற்றும் பந்து வீச்சில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா பெவிலியனுக்கு திரும்பினார். பிறகு, ராகுல் சூர்யகுமாருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் எடுத்தார்.
Also Read | Road Safety World Series: மீண்டும் Yuvraj Singh கலக்கல், ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்!
இந்திய பந்து வீச்சாளர்களில் ஷார்துல் தாக்கூர் அதிக விக்கெட்டுகளாக மூன்று விக்கெட்டுகளை எடுத்தாலும், 4 ஓவர்களில் 42 ரன்களை கொடுத்துவிட்டார். இந்த தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட ராகுல் சாஹரும் தனது நான்கு ஓவர்களில் 35 ரன்களை கொடுத்தார். இருந்தாலும், டேவிட் மாலன் (Dawid Malan) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (Jonny Bairstow) என முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஹார்டிக் பாண்ட்யாவின் அற்புத அந்துவீச்சு இந்திய வெற்றிக்கு அத்தியாவசியமானதாக இருந்தது. காயம் அடைந்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, நான்கு ஓவர்களில் 16 ரன்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் T20I தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இதனால் சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். தொடரை இந்தியா வெல்லுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக என்ற பதிலையே ரசிகர்கள் விரும்புகின்றனர்.
Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR