நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து, காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி, நவம்பர் 5 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் கான்பூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அஜின்கியா ரகானே தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், விரிதிமான் சகா, ஜடேஜா, அஷ்வின் (Ravichandran Ashwin), உமேஷ் யாதவ், அக்சர் படேல் உள்ளிட்டோர் விளையாட உள்ளனர். கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.


கே.எல்.ராகுலும் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தார். ஆனால், தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள பிசிசிஐ (BCCI), கே.எல்.ராகுலுக்குப் பதிலாக சூர்யக்குமார் யாதவ் அணியில் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. 


கே.எல்.ராகுல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகியது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முன்னணி வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி, கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.


ALSO READ: அஸ்வின் சொல்வது உண்மையா? இவர்களை கைவிடுகிறதா டெல்லி அணி! 


நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியில் உலகின் மிகச்சிறந்த அணியாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கடைசியாக மோதின. அதில், நியூசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை வீழ்த்தியது. அத்துடன் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற அணி என்ற முத்திரையும் பதித்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு இரு அணிக்கும் நேருக்கு நேர் டெஸ்ட் போட்டியில் சந்திக்க உள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து தோல்வியை விரும்பாது. அதேநேரத்தில் முன்னணி வீரர்கள் இல்லாமல் இருந்தாலும், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள், தங்களுக்கான டெஸ்ட் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். 


நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பதன் மூலம் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை தக்கவைப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் தங்களின் முழுத் திறமையையும் பயன்டுத்தி நியூசிலாந்து அணியை வீழ்த்த முயற்சிப்பார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக, 20 ஓவர் தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் (Team India) மோதிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.


ALSO READ:ரன் மெஷினுக்கு என்ன ஆச்சு? சோதனையில் இருந்து மீள்வாரா கோலி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR