ரன் மெஷினுக்கு என்ன ஆச்சு? சோதனையில் இருந்து மீள்வாரா கோலி

மிகச்சிறந்த பேட்டிங் ஃபர்மாமென்ஸ் மூலம் அனைவரின் புருவத்தையும் உயர வைத்த கோலி, இப்போது சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார்.

Written by - S.Karthikeyan | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2021, 12:58 PM IST
ரன் மெஷினுக்கு என்ன ஆச்சு? சோதனையில் இருந்து மீள்வாரா கோலி title=

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் கோலிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகள் போதாக்காலமாக இருந்து வருகிறது. கேப்டன்சியில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்றுத் தர முடியாத கோலி, தனிப்பட்ட அவரது ஆட்டத்திலும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியதற்கு பின்பு அவர், பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இன்றோடு, அவர் இந்திய அணிக்காக சதமடித்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

கடைசியாக, நவம்பர் 22 ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்திருந்தார் (Virat Kholi Century). கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 136 ரன்கள் விளாசியிருந்தார். அதற்கு அடுத்தபடியாக இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒரு நாள் போட்டியிலும், 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி சதமடித்திருக்கிறார். குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 114 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடியபோதும், அவரால் சதமடிக்க முடியவில்லை. இங்கிலாந்து அணிகுக்கு எதிரான தொடர்களில் இரண்டு முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தபோதும், அதனை சதமாக மாற்ற முடியவில்லை. 

ரோகித்துடன் (Rohit Sharma) ஒப்பிடும்போது கோலியின் பேட்டிங் சராசரி மிகவும் குறைவாக உள்ளது. ஜனவரி 1, 2020 -க்குப் பிறகு 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித், 2 சதங்களுடன் 906 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 47.68. இந்த காலகட்டத்தில் கோலி 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 26.80. இதில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒரு நாள் போட்டியில் இதே காலகட்டத்தில் ரோகித் சர்மா 9 போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 519 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், விராட் கோலி 15 போட்டிகள் விளையாடி 649 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ALSO READ | IPL 2022: விராட் கோலிக்குப் பிறகு RCB அணியின் புதிய கேப்டன் இவர்தானா

தொடக்க காலத்தில் மிகச்சிறந்த பேட்டிங் ஃபர்மாமென்ஸ் மூலம் அனைவரின் புருவத்தையும் உயர வைத்த விராட் கோலி (Virat Kholi), இப்போது சோதனையான காலகட்டத்தில் இருக்கிறார். சச்சினைப் போலவே ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அவரால் கொடுக்க முடியவில்லை. சச்சின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்தியா 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 

ஒரு நாள் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, 73 போட்டிகளில் விளையாடி 23 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், சச்சினின் தனிப்பட்ட ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. அதனால், சச்சின் அணிக்காக விளையாடாமல், தனக்காக மட்டுமே விளையாடுகிறார் என்ற விமர்சனத்தையும் எதிர்கொண்டார்.

ALSO READ | உலக கோப்பை தோல்வி: ஐசிசி தரவரிசையில் கீழே இறங்கிய விராட் கோலி!

இப்போது அதே நிலையில் கோலி இருக்கிறார். கேப்டனாக ரோகித்தின் டிராக் ரெக்கார்டு கோலியைவிட சிறப்பாக உள்ளது. இதனால், ஒரு நாள் அணிக்கும் அவரையே கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவேளை கோலி, கேப்டன்சி தனக்கான பணிச்சுமையாக கருதினால், டெஸ்ட் தவிர்த்து ஒருநாள் கேப்டன்சிப்பையும் விட்டுவிட்டு, பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம். ஏனென்றால், கேப்டன்சி மற்றும் பேட்டிங் இரண்டிலும் சொதப்பும்போது, தன்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்துவது சிறந்தது. 

சச்சின் (Sachin Tendulkar) ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்துள்ளார். அந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் 2வது இடத்திலும், 70 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் குறைந்தபட்சம் 5 சதங்களையாவது கோலி அடித்திருக்கலாம். மேலும், சச்சினின் 100 சதங்கள் என்ற மகத்தான சாதனையையும் முறியடிக்கும் வாய்ப்பை நெருங்கியிருக்கலாம். இந்த வாய்ப்பு இப்போது கோலிக்கு மட்டுமே இருக்கிறது. இதனால், விரைவில் பழைய ஃபார்முக்கு திரும்புவாரா ரன் மெஷின்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ALSO READ | கேப்டனாகவும் "ஹிட்" அடிக்கும் HITMAN -டேட்டா சொல்லும் விவரம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News