India vs New Zealand 3rd ODI: கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லத் தவறியதைத் தொடர்ந்து, பிசிசிஐ புதிய மற்றும் இளம் இந்திய அணியை டி20 வடிவத்திற்கு  தேர்ந்தெடுத்து வருகின்றனர். உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித்தும், கோஹ்லியும் ஒரு டி20 போட்டியில் கூட விளையாடியதில்லை.  இந்த மாத தொடக்கத்தில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார், ஏனெனில் ரோஹித் அல்லது கோஹ்லி அணியில் இடம் பெறவில்லை. அப்போது, ​​தேர்வாளர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.  இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது ரோஹித் மற்றும் கோஹ்லி இருவரும் டி20 அணிக்கு மீண்டும் வருவார்கள் என கிரிக்கெட் வட்டாரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தேர்வாளர்கள் வேறுவிதமாக முடிவு செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Ind vs Nz: 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால்..! இந்திய அணி செய்யப்போகும் சாதனை!


 


விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து ராகுல் டிராவிட்:


நியூஸிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான அணியில் மூத்த வீரர்கள் எவரையும் பிசிசிஐ அணியில் குறிப்பிடவில்லை. இந்த தொடருக்கு மீண்டும் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து, இருவரின் டி20 எதிர்காலம் குறித்த முணுமுணுப்புகள் தொடங்கின, பலர் இருவரது டி20 கரியர் முடிவுக்கு வந்ததாகவும் கூறினர்.  தேர்வாளர்களின் சமீபத்திய முடிவுகள், ரோஹித்தும் கோஹ்லியும் இனி டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற செய்தியை நம்ப வைத்தன. இருப்பினும், வதந்திகளை மறுத்துள்ள ராகுல் டிராவிட், இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.



நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பேசிய டிராவிட்டிடம் டி20 அணியில் இருவரும் இல்லாதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட், “நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவு காரணமாக சில வெள்ளை-பந்து போட்டிகளுக்கு சில முன்னுரிமைகள் கொடுக்க வேண்டும். பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவை எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. சில வெள்ளை-பந்து போட்டிகளுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு நடந்த ஆறு ஆட்டங்கள் ODI போட்டிகளிலும் விராட் விளையாடியுள்ளார். அடுத்த வாரத்தில் ரோஹித் மற்றும் இன்னும் சில வீரர்களுடன் சேர்ந்து அவருக்கு ஓய்வு கிடைக்கும், அதனால் அவர்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவதற்கு முன்பு புத்துணர்ச்சியுடன் வருவார்கள்” என்று டிராவிட் மேலும் கூறினார்.


அடுத்த மாதம் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள முக்கியமான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரின் முடிவு தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும்.


மேலும் படிக்க | IND vs NZ: தோனி இருந்த வரை அந்த பிரச்சனை இல்லை! மனம் திறந்த ராகுல் டிராவிட்!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ