IND vs NZ: தோனி இருந்த வரை அந்த பிரச்சனை இல்லை! மனம் திறந்த ராகுல் டிராவிட்!

India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிராவிட், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2023, 08:16 AM IST
  • இன்று நடைபெறுகிறது 3வது ஒருநாள் போட்டி.
  • தொடரை ஏற்கனவே வென்ற இந்தியா.
  • 3-0 என்று வாஷ்அவுட் செய்ய திட்டம்.
IND vs NZ: தோனி இருந்த வரை அந்த பிரச்சனை இல்லை! மனம் திறந்த ராகுல் டிராவிட்! title=

India vs New Zealand: உலகக் கோப்பை நடைபெற உள்ள இந்த ஆண்டில் ரிஷப் பந்த் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார்.  தனிப்பட்ட காரணங்களால் நியூசிலாந்து தொடரில் கேஎல் ராகுல் விளையாடவில்லை,  இதனால் இஷான் கிஷன் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளார்.  இந்திய துணை கேப்டன் ராகுல் இலங்கை தொடர் முதல் தேர்வு கீப்பராக இருந்து வருகிறார்.  நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலைமை பயிற்சியாளர் டிராவிட், 2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் தேவை குறித்து பேசியுள்ளார்.  டிராவிட் 2003 உலகக் கோப்பையில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் ஆக இருந்தார். 

மேலும் படிக்க | வடிவேலு பாணியில் நண்பனிடம் ஏமாந்த உமேஷ் யாதவ்..! ரூ.44 லட்சம் அபேஸ்

“நாங்கள் எப்போதும் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனைத் தேடுகிறோம், அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. எம்எஸ் தோனி இருந்த வரை, ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களின் தேவை இல்லாமல் இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், இந்திய அணியில் இஷான் கிஷன், கேஎஸ் பாரத் போன்ற நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.  இஷான் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது அணியில் ராகுல் இருக்கிறார், சாம்சன் இருக்கிறார். இவர்கள் அனைவரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்கள். முஷ்டாக் அலி டிராபி மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் அவர் விளையாடியதைப் போல மிக விரைவான வேகத்தில் பேட்டிங் செய்து ரன்களை அடிக்கும் திறமையின் காரணமாக ஜிதேஷ் ஷர்மாவை டி20 எடுத்துள்ளோம். ” என்று டிராவிட் கூறினார்.

ராகுல் இல்லாத நிலையில் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பிங் செய்து வரும் கிஷன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டார். ஒருநாள் போட்டியில் அவரது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து கிஷன் தனது முதல் டெஸ்ட் அழைப்பைப் பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான தனது இரட்டை சதத்தின் மூலம் இந்திய அணியை திரும்பி பார்க்க வைத்தார்.  ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீகர் பாரத்க்கு பதிலாக கிஷான் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழங்கால் காயம் காரணமாக டி20 ஐ தொடரில் இருந்து வெளியேறிய விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திரம் சேர்க்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் ஜிதேஷ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.  

மேலும் படிக்க | Ind vs NZ: மைதானத்திற்குள் ரோஹித் சர்மாவை கட்டிபிடித்த ரசிகர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News