Asia Cup 2023, India vs Pakistan: செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை, கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த ஆசியக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் vs இந்தியா மோதலில் மழை மீண்டும் ஒருமுறை போட்டியை குறுக்கிட்டது.  இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது.  24.1 ஓவர்களில் 147/2 ரன்களை எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.  கொழும்பில் கனமழை பெய்து வருவதால், இன்று செப்டம்பர் 11 திங்கட்கிழமை ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு 9 மணிக்கு மேல் மழை நின்றது.  பிறகு DLS முறைப்படி 20 ஓவரில் 181 ரன்களும், 21 ஓவர் ஆட்டத்திற்கு 187 ஆகவும், 22 ஓவர் ஆட்டத்திற்கு 194 ஆகவும், 23 ஓவர் ஆட்டத்திற்கு 200 ஆகவும், 24 ஓவர் ஆட்டத்தில் 206 ஆகவும் இலக்கு வைக்கப்பட்டு இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டிகள் ஹைலைட்ஸ்



இருப்பினும் மீண்டும் மழை குறுக்கிட்டதால் எந்த ஆட்டமும் நடைபெறவில்லை, இன்று அதே ஸ்கோரில் போட்டி மீண்டும் தொடங்கும். இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய ஆட்டம் மழையால் பல்லேகலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்க அனுமதிக்காததால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா முதலில் பேட் செய்து 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, மழையால் ஆட்டமிழந்து இரு அணிகளுக்கும் இடையே புள்ளிகள் பகிரப்பட்டன. இதற்கிடையில், சூப்பர் 4 போட்டியின் போது, ​​தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 121 ரன் பாட்னர்ஷிப் போட்டதால், இந்தியா நல்ல தொடக்கத்தை பெற்றது. ரோஹித் ஷாஹீன் அப்ரிடியை அபாரமான சிக்ஸருக்கு விளாச, தொடக்க ஜோடி முதல் ஓவரிலிருந்தே அதிரடியை வெளிப்படுத்தியது. மேலும், கில் அடுத்த ஓவர்களில் மூன்று பவுண்டரிகளை விளாசினார்.


இந்திய அணித்தலைவர் ரோஹித் (49 பந்தில் 56) லாங்-ஆஃபில் கேட்ச் கொடுத்து அவுட்டானார், அடுத்த ஓவரிலேயே கில்லை (52 பந்தில் 58) அவுட் செய்து அப்ரிடியும் மீண்டும் திரும்பினார். மழை குறுக்கிட்ட போது, ​​விராட் கோலி (8* பந்துகள் 16) மற்றும் கேஎல் ராகுல் (17* பந்தில் 28) 24 ரன்கள் சேர்த்து க்ரீஸில் இருந்தனர். திங்கட்கிழமை இன்றும் கொழும்பில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன, அப்படி மழை வந்தால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.  இன்று விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் நல்ல பேட்டிங்கை கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணி 300+ ரன்களை எளிதாக அடிக்க முடியும்.


இந்தியா விளையாடும் 11: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (வ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


பாகிஸ்தான் விளையாடும் 11: பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான்(டபிள்யூ), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்


மேலும் படிக்க | INDvsPAK: கேஎல் ராகுல் ரிட்டன்ஸ், உட்கார வைக்கப்பட்ட ஐயர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ