INDvsPAK: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரிசர்வ் டே ரூல்ஸ் இதுதான்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், போட்டி விதிமுறை மற்றும் ரிசர்வ் டே ரூல்ஸ் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 10, 2023, 05:30 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மழையால் பாதிப்பு
  • போட்டி நடக்கவில்லை என்றால் நாளை நடக்கும்
  • பாகிஸ்தான் 20 ஓவர் ஆடினால் இன்றே முடிவு தெரியும்
INDvsPAK: இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரிசர்வ் டே ரூல்ஸ் இதுதான் title=

இந்திய அணி அதிரடி தொடக்கம்

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தன்னுடைய பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டிருக்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி கொழும்பில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது. ஓப்பனிங் இறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இதேபோல் சுப்மான் கில் 58 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 10 பவுண்டரிகள் விளாசினார் அவர்.

மேலும் படிக்க | IND vs PAK: பாகிஸ்தான் பவுலிங்கை தாக்குபிடித்து வெற்றி பெறுமா ரோஹித் & கோ...?

திடீரென குறுக்கிட்ட மழை

மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் களத்தில் இருக்கும் நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.  24.1 ஓவர் ஆடியிருக்கும் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் 90 விழுக்காடு மழைக்கு வாயப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் போட்டி தடைபடும் என தெரிந்த காரணத்தினால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இப்போட்டிக்கு ரிசர்வ் டே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவ்விரு அணிகள் லீக் சுற்றில் பல்லக்கலே மைதானத்தில் மோதிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்ட நிலையில் தான் இப்போட்டிக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் என்ன?

ஒருவேளை இப்போது குறுக்கிட்டு இருக்கும் மழை தாமதமாக நின்றால், இந்திய அணி பேட்டிங் விளையாடாது. இப்போது இருக்கும் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் நிர்ணயிக்கப்படும். ஈஎஸ்பின் கிரிக்இன்போ தகவலின்படி, 20 ஓவரில் 181 ரன்களும், 24 ஓவர்கள் என்றால் 206 ரன்களும் பாகிஸ்தான் அணி எடுக்க வேண்டியிருக்கும்.

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியின் ரிசர்வ் டே விதிகள்

போட்டி எப்போது ரிசர்வ் டேக்கு செல்லும்?

செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமையான இன்று போட்டியின் முடிவு எட்டப்படுவதை உறுதிசெய்ய போட்டி அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முயற்சிப்பார்கள். போட்டி மழையால் குறுக்கிடப்பட்டால் போட்டியின் ஓவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது முதல் நடவடிக்கையாகும். ஐசிசி விதிமுறைகளின்படி, ஒருநாள் போட்டியின் முடிவை அடைய இரண்டு இன்னிங்ஸிலும் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் வீசப்பட வேண்டும். அதாவது பாகிஸ்தான் அணி குறைந்தபட்சம் 20 ஓவர் விளையாடினால் முடிவு அறிவிக்கப்படும். இல்லையென்றால் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்படும்.

ரிசர்வ் நாளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் தொடங்குமா?

ரிசர்வ் நாள் என்பது போட்டியின் தொடர்ச்சியே தவிர மறுதொடக்கம் அல்ல. இதன் விளைவாக, இன்றைய போட்டியின்போது எந்த நிலையில் நிறுத்தப்படுகிறதோ, அதே நிலையில் இருந்து போட்டி ரிசர்வ் நாளான நாளை தொடங்கும். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019-ல் அரையிறுதியின் போது  நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி கடைசியாக ரிசர்வ் தினத்தில் விளையாடியது. மான்செஸ்டரில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. 

மறுநாள் ஆட்டம் அதே ஸ்கோரில் மீண்டும் தொடங்கியது. நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்குச் சுருண்டு 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசி சர்வதேசப் போட்டி இதுவாகும். அவர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | IND vs PAK: ரோஹித், கில் அடுத்தடுத்து அவுட்; குறுக்கிட்ட மழை - இந்திய வெற்றிக்கு என்ன இலக்கு தேவை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News