Ind vs Pak: கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் போட்டி ஒன்று உண்டு என்றால், அது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். இதை ஒரு கிரிக்கெட் போட்டி என்று மட்டும் கொள்ளாமல், ஒரு யுத்தமாகவே ரசிகர்கள் நினைப்பது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த காலம் முதல் இன்று வரை இந்தியா பாகிஸ்தான் (Ind vs Pak) போட்டிகளின் போது, இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் உணர்ச்சிகளும் உச்சம் தொடும். இந்த நிலையில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் டி-20 உலகக் கோப்பை போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறார்கள். 
சமூக ஊடகங்களில், மீம்களும் கணிப்புகளும் களைகட்டுகின்றன.


இந்திய அணி (Team India) தனது இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக அணியின் மன உறுதியும் அபாரமாக உள்ளது. அக்டோபர் 24 அன்று நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.


முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளருமான மாத்யூ ஹேய்டன், இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அச்சம் கொள்ளும் அந்த இரு இந்திய வீரர்கள் யார்?


இந்த இந்திய வீரர்களால் பாகிஸ்தானுக்கு ஆபத்து


இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கூறுகையில், 'நான் இந்திய கிரிக்கெட்டை மிகவும் நெருக்கமாக ஃபாலோ செய்கிறேன். கே.எல்.ராகுல் நன்றாக விளையாடுவதை நான் பார்த்துள்ளேன். இவர் பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வளர்ந்ததை நான் பார்த்துள்ளேன். அவரது போராட்டத்தையும் நான் கவனித்துள்ளேன். அவர் டி20 வடிவத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார். ரிஷப் பந்த், பந்துவீச்சை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடட வேண்டிய ஒரு விஷயம். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் பவுலர்களை பந்தாடி விடுவார்.’ என்றார்.


ALSO READ: 


கே.எல்.ராகுல்


நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியின் இந்த அதிரடி துவக்க ஆட்டக்காரர் அட்டகாசமான பார்மில் உள்ளார். அவர் இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் அற்புதமான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். ஐபிஎல் 2021ல் 600 ரன்களுக்கு மேல் அடித்தார். இன்னிங்ஸின் தொடக்கத்தில் ராகுல் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


ரிஷப் பந்த்


இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கிற்காக பெயர் பெற்றவர். பந்த் (Rishab Pant) ஒரு கையால் சிக்ஸர் அடிப்பதில் மிகவும் திறமையானவர். இதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். டெத் ஓவர்களில் அவரைத் தடுப்பது எளிதல்ல. அவர் தனது ஃபார்மில் இருந்தால், பவுலர்களை அடித்து நொறுக்க நேரம் எடுப்பதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி பந்திடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸை எதிர்பார்க்கிறார்.


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி


விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.


காத்திருப்பு: ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சாஹர்


பயிற்சியாளர்: ரவி சாஸ்திரி.


மெண்டர்: எம்எஸ் தோனி.


ALSO READ: புவனேஷ்வர் குமார் நீக்கம்? ஷர்துலுக்கு அதிகரித்த டிமேண்ட்; ப்ளேயிங் 11ல் யார்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR