இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக். 11) நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 1 போட்டிகளை வென்றதால், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இந்த போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை காரணமாக அரைமணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தாவன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய பந்துவீச்சு சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 



மேலும் படிக்க | இஷான் கிஷானின் காதலிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?


100 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. எனினும், தொடக்க வீரராக வந்த கேப்டன் தவான் 8 ரன்களில் ரன்-அவுட் முறையில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷானும் 10 ரன்களில் வெளியேறினார்.



இருப்பினும், மற்றொரு ஓப்பனர் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினர். இலக்கை எட்ட 3 ரன்கள் மட்டுமே இருந்தபோது, சுப்மன் கில் 49 ரன்களில் அவுட்டாகி, அரைசதத்தை தவறிவிட்டார். தொடர்ந்து, 18.5 ஓவர்களில் இந்திய அணி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ஷ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லுங்கி இங்கிடி, ஜோர்ன் ஃபார்டுயின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரையும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ