ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான்

டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு இந்திய அணி, மேற்கு ஆஸ்திரேலியா உடனான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.     

Written by - Sudharsan G | Last Updated : Oct 10, 2022, 05:45 PM IST
  • இந்திய அணி 4 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
  • இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது.
  • சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான் title=

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்.16ஆம் தேதி தொடங்குகிறது. தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், முதல் சுற்று வரும் அக். 16ஆம் தேதியில் இருந்து அக். 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, சூப்பர் 12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது. நவ. 9, 10 தேதிகளில் அரையிறுதிப்போட்டிகள், நவ. 13ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

சூப்பர்-12 சுற்றுக்கு போட்டிக்கு முன்பாக, பல்வேறு அணிகள் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கின்றன. மேலும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை. எனவே, பயிற்சியை விரைவாகவே தொடங்க ரோஹித் சர்மா தலைமையிலான 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அக். 6ஆம் தேதியே ஆஸ்திரேலியா புறப்பட்டது.

அதாவது, பயிற்சி ஆட்டங்களில் இரண்டு போட்டிகள் முன்னரே திட்டமிடப்பட்ட நிலையில், இந்திய அணி கூடுதல் பயிற்சிக்காக கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திடீரென திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா அணியுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (அக். 10) விளையாடியது. 

மேலும் படிக்க | T20WC: வேற வழியே இல்லாமல் ஸ்டார் பவுலரை அழைக்கும் இந்திய அணி

பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிக்க, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் சற்று கைக்கொடுக்க இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. 

அடுத்து விளையாடிய மேற்கு ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைதான் எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 6 ரன்கலை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சஹால், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஓப்பனராக களமிறங்கினார். வழக்கமாக, கேஎல் ராகுல் தான் டி20 போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கி வந்தார். அவர் காயத்தால் அவதிப்பட்டிருந்தபோது நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கியிருந்தது நினைவுக்கூரத்தக்கது. 

தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், உலகக்கோப்பைக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனில் அவரின் இடம் உறுதியாகியுள்ளது. இதனால், ரிஷப் பண்ட் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. அதிரடி வீரரான ரிஷப் பண்ட் டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். எனவே, தினேஷ் கார்த்திக் பிளேயிங் லெவனில் இருக்கும்போது, ரிஷப் பண்ட் அணிக்கு கூடுதல் சுமையாகிவிடுகிறார். அந்த இடத்தில் அவருக்கு பதிலாக அஸ்வினோ அல்லது கூடுதல் பௌலிங் ஆப்ஷன் உள்ள வீரர்களை வைத்து நிரப்ப அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. 

மேலும் படிக்க | உலகக்கோப்பைக்கு இவரும் கிடையாதா? - இந்திய அணியை துரத்தும் காயம்!

இருப்பினும், ரிஷப் பண்ட் கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, மேட்ச் வின்னராக இருந்தார். மற்ற வீரர்களை விட ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவருக்கு அதிக அனுபவமும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணியை பலமுறை கரை சேர்த்துள்ளதையும் மறந்துவிடக்கூடாது.

எனவே தான் அவரை ஓப்பனிங்கில் இறக்க இந்திய அணி திட்டமிடுகிறதோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது. டி20 பவர்பிளேயில் 2 வீரர்கள் மட்டும் 30 யார்டு வட்டத்திற்கு வெளியே இருப்பார்கள் என்பதால், ரிஷப் பண்டின் அதிரடி, பெரிய ஸ்கோரை எட்ட இந்திய அணிக்கு சிறந்த அடித்தளமாக அமையும். தற்போது, ஓப்பனிங்கில் களமிறங்கும் துணை கேப்டன் கேஎல் ராகுலை பேட்டிங் ஆர்டரில் கீழே இறக்கினாலும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த விஷயத்தில் ஒரு தீர்ககமான முடிவை எடுக்க இந்த பயிற்சி ஆட்டங்கள் கைக்கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் மீண்டும் மேற்கு ஆஸ்திரேலியா உடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ள நிலையில், அக். 17ஆம் தேதியுடன் ஆஸ்திரேலியாவுடனும், அக். 19ஆம் தேதியுடன் நியூசிலாந்துடனும் மோத உள்ளது. இன்றைய போட்டியில், கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 9 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | இதுலாம் நமக்கு தேவையா? ரன் அவுட்க்கு ஆசைபட்டு பல்பு வாங்கிய சிராஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News