IND vs SL Asia Cup 2023: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதல் முடிந்த 15 நேரத்திற்குள் இலங்கையுடன் இந்திய அணி விளையாட உள்ளது.  இதனால் இந்தியா தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் சக வீரர்களுக்கு நிச்சயம் இது சோர்வாக இருக்கிறது, ஆனால் மழை குறிக்கிடுவதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு வேறு வழியில்லை. ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாடுவதால், இந்தியா ப்ளேயிங் 11க்கு அணி கடினமான சில முடிவுகளை செய்ய வேண்டும். வீரர்களை சோர்வாக இல்லாமல், புதியதாக வைத்திருக்கவும் காயங்களைத் தவிர்க்கவும் அவர்கள் அணியை மாற்ற வேண்டும். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டி செவ்வாய்க்கிழமை இன்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியில் இருந்து, ஆசியக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா தனது இடத்தை உறுதிப்படுத்த இலங்கைக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். வலுவான பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆல்ரவுண்ட் ஷோவுக்குப் பிறகு இந்தியா நம்பிக்கையுடன் இருக்கும். ஆனால் சோர்வு அணித் தேர்வின் விதிமுறைகளை மாற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IND vs PAK: பாகிஸ்தானின் இந்த பயங்கர பவுலர் இன்று பந்துவீச மாட்டார் - ஏன் தெரியுமா?


செப்டம்பர் 10: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4
செப் 11: இந்தியா vs பாகிஸ்தான் ரிசர்வ் டே
செப் 12: இந்தியா vs இலங்கை
செப் 15: இந்தியா vs வங்கதேசம்
செப் 17: ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி


திங்களன்று விராட் கோலியும் கேஎல் ராகுலும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேட்டிங் செய்தனர். மேலும் கோஹ்லி மிகவும் உடற்தகுதியுடன் இருந்தாலும், கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து திரும்பி வருகிறார். எனவே அதற்கு பதிலாக, இஷான் கிஷன் விக்கெட் கீப்பர்-பேட்டராக இருப்பார், சூர்யகுமார் யாதவ் இன்று விளையாட வாய்ப்பு உள்ளது.  முதன்மையான மாற்றங்கள் பந்துவீச்சு தாக்குதலில் இருக்கலாம். ஹர்திக் பாண்டியாவைத் தவிர ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவர்களுக்கு பதிலாக அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி ஆகியோர் களமிறங்கலாம்.


IND vs SL: என்ன எதிர்பார்க்கலாம்?


IND vs PAK போட்டியில் மழை குறுக்கிட்டதால், இந்தியா தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.  பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர்கள், குறிப்பாக விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக ஆடினர். காயத்தில் இருந்து திரும்பி உள்ள கேஎல் ராகுல் உறுதியாக இருக்கிறார். அவர் 106 பந்துகளுக்கு பேட்டிங் செய்தார், 4 மாத காயத்திலிருந்து திரும்பியபோது ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். ஆனால் 2023 உலகக் கோப்பைக்கு அவர் மீண்டும் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.  இலங்கைக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் இடம் பெறுவார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியிலிருந்து மீண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  அவர் 6 மாத காயம் நீக்கப்பட்டதிலிருந்து திரும்பி வருவதைக் கருத்தில் கொண்டு, அவர் திரும்புவதற்கு அவசரப்பட மாட்டார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஈரமான சூழ்நிலையில் மிகச் சிறப்பாக பந்து வீசினர். ஆனால் பும்ரா ஒரு வருட கால காயம் நீக்கப்பட்ட நிலையில் இருந்து திரும்புவதால், இந்தியா அவரை ரிஸ்க் செய்ய விரும்பவில்லை.


இலங்கைக்கு எதிராக உத்ததேச இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (WK), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.


ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் படேல், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா


மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: இரண்டு முறையும் டிஆர்எஸ் தவறாக எடுத்த பாகிஸ்தான் அணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ