Ind Vs SL: இந்தியா 49 ரன்கள் முன்னிலை!
போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 ஆம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வியாழன் அன்று காலை துவங்கியது. மழை பெய்ததால், சற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
உணவு இடைவேளைக்கு பிறகே டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனையடுத்து 2-ஆம் நாள் ஆட்டத்தினை வெள்ளி அன்று காலை இந்தியா துவங்கியது. பின்னர் முதல்நாள் ஆட்டத்தைப் போலவை இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.
அதன் பின்னர் களமிரங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சருக்கிய போதிலும் பின்னர் சற்றே சுதாரித்துக்கொண்டு, நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
மூண்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
நாளை 4 ஆம் நாள் ஆட்டம் 15 நிமிடம் முன்னதாகவே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 4 நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் இலங்கை 294 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. எனவே இந்திய அணியை விட 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இலங்கை.
இதனையடுத்து இந்தியா தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தவான் மற்றும் ராகுல் தொடக்க ஆட்டகாரர்களாக களமிரங்கினர். நிதானமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை சற்று சருக்களில் இருந்து நிலை நிறுத்தினர். எனினும் தவான் 94(116) ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிரங்கிய புஜாரா, ராகுலோடு கைகோர்த்து விளையாடி வருகின்றார். போதிய வெளிச்சமின்மை காரணமாக 4 ஆம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
தற்போதைய ஆட்டநேர முடிவில் இந்தியா 39.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 2(9) மற்றும் ராகுல் 73(113) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது இலங்கையை விட 49 ரன்கள் அதிகம் ஆகும்!