இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் கடந்த டிசம்பர் 2-ஆம் நாள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரம்பத்தில் நிதானமான விளையாட்டை வெளிப்படுத்திய இந்தியா, பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.


இதனால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 156(186) மற்றும் ரோகித் சர்மா 6(14) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.


இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தினை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்தனர், பரபரப்பான ஆட்டத்தின் மூலம் ரன்களை குவித்தனர். இதானால் இந்தியா 127.5 ஓவர் முடிய 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தங்களது முதல் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது!


அதன் பின்னர் களமிரங்கிய இலங்கை அணி வீரர்கள் கருணரத்னே 0(1), சில்வா 1(14) ரன்களில் வெளியேர பின்னர் களமிரங்கிய பெரேராவும் 42(54) ரன்னில் வெளியேறினார். 


எனினும் மேத்திவ்ஸ் மற்றும் சண்டிமல் தங்களது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.


இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 44.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது. 


இதனையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தினை இலங்கை தொடர்ந்து விளையாது. மேத்திவ்ஸ் 111(268) ரன்களில் வெளியேற,  சமரவிக்ரமா 33(61) ரன்களில் வெளியேறினர். இதற்கிடையில் மற்ற வீரர்களும் சொர்ப ரன்களில் வெளியேற மூன்றாம்நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 130 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து நான்கம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது!


ஆட்டம் துவங்கிய 5வது ஓவரில் இலங்கை தனது 10வது விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணியால் முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது!


பின்னர் இந்திய அணி தங்களது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் முரளி விஜய் 9(12) மற்றும ரஹானே 10(37) ரன்களில் வெளியேறினார். 


எனினும் தவான் 67(91), புஜாரா 49(66), கோலி 50(58) நிதானமாக விளையாடி வெளியேறினர். இதனால் இந்தியாவின் ரன்கள் கனிசமாக உயர்ந்தது. ரோகித் சர்மாவும் அரை சதத்தினை பூர்த்தி செய்ய இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்லர் செய்தது!


இதனால் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. எனவே இலங்கைக்கான வெற்றி இலக்கு 410-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.