ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா வெற்றி.. வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது!
Olympic hockey : ஒலிம்பிக் ஹாக்கியில் பரபரப்பாக நடைபெற்ற வெணகல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணியை 2-1 என வீழ்த்தியது.
Olympic hockey, India wins bronze : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்த இந்திய அணி, இன்று நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை என்ற மோசமான சாதனை 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று சாதித்துள்ளது இந்திய அணி.
இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்பெயினுக்கு எதிரான இந்த போட்டியிலும் 2 கோல் அடித்தார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக் போட்டியில் மட்டும் 8 போட்டியில் 10 கோல்களை அடித்து இந்திய அணிக்கு தூணாக இருந்தார் ஹர்மன்ப்ரீத். அவரைப் போலவே கோல்கீப்பர் ஸ்ரீஜேஸூம் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஸ்பெயின் அணி பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தபோதும் தன்னுடைய சிறப்பான தடுப்பை களத்தில் காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு அரணாக இருந்தார். இந்த வெற்றி மூலம் இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஸ் ஓய்வும் பெற்றார். அவருக்கு இந்திய ஹாக்கி வீரர்கள் அனைவரும் இந்த வெற்றியை பரிசாக அளித்தனர்.
இந்திய அணியின் வெற்றி உறுதியானதும் இந்திய அணியின் ஹாக்கி வீரர்கள் ஸ்ரீஜேஸ் முன் தலைவணங்கி அவரின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தினர். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் தன் தோளில் ஸ்ரீஜேஸை தூக்கி கொண்டாடினார். ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருக்கிறது. ஸ்பெயின் அணியும் கடைசி வரை சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இருப்பினும் அவர்களால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. மிகவும் பலம் வாய்ந்த அந்த அணி வீரர்கள் இப்போட்டியில் தோல்வியை தழுவியதும் கண்ணீர்விட்டு அழுதனர். மறுபுறம் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று ஆனந்த கண்ணீர்விட்டனர். இதனால் ஹாக்கி மைதானமே உணர்ச்சிகளின் கூடாரமாக இருந்தது.
மேலும் படிக்க | ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ