CWG 2022: 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் 6வது இடத்தை பிடித்த இந்தியா
India at CWG 2022: லான்பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் அணியின் பதக்கம் உட்பட 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது
CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில், லான் பவுல்ஸ் விளையாட்டில், இந்திய மகளிர் ஃபோர்ஸ் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. லான் பவுல்ஸ் விளையாட்டின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17-10 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. லவ்லி சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்கி ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்றது. வலுவான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், இந்தியாவிற்காக லான் பவுன்ஸ் விளையாட்டில் முதல் தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 17 - 10 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
நேற்று (2022, ஆகஸ்ட் 2) நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ், பளுதூக்குதல் ஆகியப்போட்டிகளில் இந்தியர்கள் புதிய சரித்திரம் படைத்தனர். ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியா - சிங்கப்பூர் அணிகள் மோதின. போட்டியின் கடைசி சுற்று வரை பரபரப்பாக இருந்த நிலையில், யாருக்கு தங்கம் என்ற கேள்வி இறுதி வரை தொடர்ந்தது.
இறுதியில் 11 - 7, 12 - 14, 11 - 3, 11 - 9 என்ற புள்ளிக்கணக்கில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பளுதூக்குதல் போட்டியில் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் தற்போது வரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை பெற்று, பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 74 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளது.
தற்போது, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியர்களில், குத்துச்சண்டை போட்டிகளில் ரோகித் டோகாஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மேலும் படிக்க | கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டுகள்- லிஸ்ட்டுல இத்தனை பேட் இருக்கா?
மேலும் படிக்க | 20 ஓவர் உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ