கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டுகள்- லிஸ்ட்டுல இத்தனை பேட் இருக்கா?

கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள சில பேட்டுகள் சர்ச்சையைச் சந்தித்துள்ளன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 31, 2022, 06:57 PM IST
  • கிரிக்கெட்டில் பல வகை பேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • சில பேட்டுகள் சர்ச்சையைச் சந்தித்துள்ளன.
  • சர்ச்சைக்குரிய சில பேட்டுகள் பற்றி இத்தொகுப்பு.
கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டுகள்- லிஸ்ட்டுல இத்தனை பேட் இருக்கா? title=

கிரிக்கெட் போட்டிகளில் சில பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திய பேட்டுகள் சர்ச்சையைச் சந்திச்சு இருக்கு. அதுல சில சம்பவங்கள் பற்றி இந்தத் தொகுப்புல பாக்கலாம்.

எவ்...ளோ பெரிய பேட்டு!

1) 1771ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டிதான் இந்த பேட் சர்ச்சைகளுக்கான தொடக்கப்புள்ளினே சொல்லலாம். ஆமாங்க, செட்ஸி- ஹேம்பிள்டன் (Chertsey- Hambleton) அணிகள் மோதுன அந்தப் போட்டியில களமிறங்கிய பேட்ஸ்மேன் ஒருத்தரு பேட்டா, பெரிய சைஸ் பலகையானு சொல்ல முடியாதபடி ஒரு ஐட்டத்தைக் கையில எடுத்துட்டு வந்தார்.

ஸ்டெம்புகளை மறைக்கிற அளவுக்கு பேட் இருந்தாக்கூட பரவாயில்ல; விக்கெட் கீப்பரையே மறைக்கிற அளவுக்கு இருந்தா? கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் இருந்துச்சு அந்த பேட்டோட அகலம். அதுக்குப் பின்னாடிதான் கிரிக்கெட் பேட்ல புது ரூல்ஸ் அறிமுகம் ஆச்சு. பேட்டோட அகலம் நாலே கால் இஞ்ச்-க்கு மேல இருக்கக்கூடாதுனும் ரூல்ஸ் போடப்பட்டது.

என்னது கிரிக்கெட்ல டென்னிஸா!

2) பேட் தொடர்பா அடுத்த சர்ச்சை டென்னிஸால வெடிச்சது. டென்னிஸுக்கும் கிரிக்கெட்டிக்கும் என்னங்க சம்பந்தம்னு கேக்குறீங்களா? இது அந்த டென்னிஸ் இல்லங்க; இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டென்னிஸ் லில்லி. ஆமா, 1979ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- இங்கிலாந்துக்கு இடையேயான ஆசஸ் தொடர்ல களம் இறங்குன டென்னிஸ் லில்லி, அலுமினிய பேட் ஒன்னைத் தூக்கிட்டு வந்தாரு.

அலுமினிய பேட்டால பந்து டேமேஜ் ஆகுதுனு எதிரணி வீரர்கள் புகார் தெரிவிக்க கடைசில அந்த பேட் மாற்றப்பட்டு மரத்தால் ஆன பேட் கொடுக்கப்பட்டது.

அப்போ இது அது இல்லயா!

3) இந்தப் பட்டியல்ல அடுத்ததாக உள்ளவர் ரிக்கி பாண்டிங். ரிக்கி பாண்டிங்னு சொன்னதும் 2003 வேர்ல்டு கப் ஃபைனல்ல இந்தியாவுக்கு எதிரா ஸ்பிரிங் பேட் வச்சு விளையாண்டார்னு ஒரு புரளி கிளம்பிச்சே அதானேனு கேட்டுடாதீங்க. இது அது இல்ல; இது அதுக்கு அப்புறம் நடந்த ஒரு சம்பவம். யெஸ், 2006 காலகட்டத்துல ரிக்கி பாண்டிங்கோட பேட் மேல சில புகார்கள் வந்துச்சு. அது என்னனு பாத்தீங்கனா அவரோட பேட்டோட பின்புறம் கார்பன் கிராஃபைட் வச்சு இருக்குறாருங்கிறதுதான்.

இந்த மாதிரி கார்பன் கிராஃபைட் ஃபிக்ஸ் பண்ணுறதால பேட்டை இன்னும் ஃபோர்ஸா இயக்கமுடியும்னு சிலர் குற்றச்சாட்டு தெரிவிச்சாங்க. இந்த மாதிரியான பேட்டுகள் விதிமீறல்னு சொல்லி தடைவிதிக்கப்பட்டுச்சு. இது மட்டுமில்லாம பீஸ்ட், ஜெனிசிஸ்ங்கிற ரெண்டு கூக்கபரா பேட்டுகளும் இந்தப் பட்டியல்ல தடை செய்யப்பட்டுச்சு.

சாதகத்துலயும் ஒரு பாதகம்!

4) லிஸ்ட்டுல அடுத்ததா உள்ள மங்கூஸ் பேட் பத்தி பெருசா யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏன்னா ஆரம்பத்துல இருந்துல ஐபிஎல்லை பாலோ பண்றவங்களுக்கு இந்த பேட் அத்துப்படினே சொல்லலாம். 2010ல நடந்த ஐபிஎல் தொடர்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாண்ட ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனால்தான் இந்த பேட் ரொம்பவே பாப்புலர் ஆச்சுனு சொல்லலாம்.

நீளமான ஹேண்டில் கொண்ட இந்த பேட், ஹார்டு ஹிட்டிங்குக்கு யூஸ் ஃபுல்லா இருந்தாலும் டிஃபன்ஸ் ஷாட் ஆடுறதுல சில சிக்கலையும் கொடுத்துச்சு. சுரேஷ் ரெய்னாவும்கூட மங்கூஸ் பேட் யூஸ் பண்ணிப் பாத்துட்டு செட் ஆகாததால திரும்பவும் பழைய பேட்டுக்கே திரும்பிட்டாரு.

யுனிவர்சல் சோதனையா இருக்கே!

5) அடுத்ததாக இந்த சர்ச்சை லிஸ்ட்டுல இருக்குறது நம்ம யுனிவர்சல் பாஸான வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். என்னது கெய்லா; அவரு என்னங்க பண்ணாருன்னு கேக்குறீங்களா? அவரும் இந்தச் சர்ச்சையில சிக்கிருக்காரு. அது என்ன மேட்டர்னா, கடந்த 2015ல பிக்பாஷ் லீக்குல ஆடுன கெய்ல், தகதகன்னு கோல்டன் கலர் பேட்டுல விளையாடுனாரு.

கெய்ல் வச்சிருந்த அந்த பேட்டுல கோல்டு கலருக்காக மெட்டல் யூஸ் பண்ணப்பட்டிருக்குறதாக சிலர் புகார் தெரிவிக்க, கடைசில அந்தப் பேட்டையே தடை பண்ணிட்டாங்க.

மேலும் படிக்க | சமந்தா- நயன்தாரா சர்ச்சை!  முடித்துவைத்த கரன் ஜோஹர்! - அப்படி என்னதான் சொன்னார்?

கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு!

 

6) வெஸ்ட் இண்டீஸ்ல இருந்து ஒருத்தர் மட்டும்தான் சர்ச்சையில சிக்கனுமா ஏன் நாங்கலாம் சிக்கக்கூடாதானு அடுத்ததா வாண்டடா வந்து வண்டில ஏறுனவர் நம்ம ஆந்த்ரே ரஸல். இவர் சிக்கினதும் பிக்பாஷ் லீக்லதான். 2016ல நடந்த அந்தத் தொடரோட முதல் போட்டியில விளையாண்ட ரஸல், கறுப்பு கலர்ல ஒரு பேட்டைக் கொண்டுவந்து விளையாண்டார்.

அவர் அடிச்ச அடியில பேட்டுல உள்ள கறுப்பெல்லாம் பந்துல பட்டு, பந்தே கறுப்பா மாறிடுச்சு. இதென்ன பந்துக்கு வந்த சோதனைனு சொல்லி அந்தப் பேட்டுக்கும் கடைசில ரெட் கார்டு காட்டிடுச்சு கிரிக்கெட் நிர்வாகம்.

மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக் கதையில் ‘ஜெய்பீம்’ இயக்குநர்! - எந்த வழக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News